கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கு முன்பு கட்டாயமாக நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..!

Advertisement

கான்டாக்ட் லென்ஸ்

இன்றைய நவீன காலத்தில் பாதி பேர் கண்களுக்கு கண்ணாடி போடும் நிலைமை வந்து விட்டது. அந்த அளவிற்கு நம் கண்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் இந்த கண்ணாடி அணிவதையும் சிலர் தன்னுடைய முக அழகை பாதிக்கிறது என்று நினைக்கிறார்கள். இதில் பாதி பேர் மருத்துவர் கண்ணாடி அணிய சொல்லியும் அதனை அணிந்தால் அழகு போகிவிடும் என்று நினைத்து கண்ணாடி அணியாமல் இருக்கும் நபர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த கண்ணாடி அணியும் பிரச்சனை இல்லாமல் இருப்பதற்கு கான்டாக்ட் லென்ஸ் என்று ஒன்று அறிமுகமாகியுள்ளது. இத்தகைய கான்டாக்ட் லென்ஸை நிறைய பேர் உபயோகப்படுத்துகிறார்கள். ஆகையால் இன்றைய பதிவில் கான்டாக்ட் லென்ஸ் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளப்போகிறோம்.

Power Contact Lenses:

கான்டாக்ட் லென்ஸ்

தூரப்பார்வை, கிட்டப்பார்வை, தலைவலி மற்றும் படிக்கும் போதோ அல்லது எழும்போதோ கண்களில் பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி கண்ணாடி அணிவது வழக்கம்.

ஆனால் இப்போது கண்களுக்கு கண்ணாடிற்கு பதிலாக கான்டாக்ட் லென்ஸை தான் அதிகமான நபர்கள் விரும்புகிறார்கள். இதை சிலர் ஸ்டைலுக்காகவும் உபயோகப்படுத்துகின்றனர்.

கண்ணடி அணிவதை விட கான்டாக்ட் லென்ஸ் அணிவது மிகவும் எளிதாக இருப்பதாலும் பெரும்பாலான மக்கள் கண்ணாடிக்கு பதிலாக இந்த லென்ஸை பயன்படுத்துகின்றனர்.

இந்த கான்டாக்ட் லென்ஸ் இரண்டு வகைகளாக இருக்கிறது.

  1. யூனிஃபோக்கல் லென்ஸ் 
  2. மல்டி ஃபோக்கல் லென்ஸ் 

யூனிஃபோக்கல் லென்ஸ்:

இந்த யூனிஃபோக்கல் லென்ஸானது கண்களில் ஏற்படும் தூரப்பார்வை பிரச்சனையை மட்டும் குணப்படுத்துவதற்கு பயன்படுகிறது.

மல்டி ஃபோக்கல் லென்ஸ்:

கிட்டப்பார்வை, தூரப்பார்வை இரண்டு பிரச்சனையையும் சரி செய்வதற்கு மல்டி ஃபோக்கல் லென்ஸ் உபயோகப்படுத்த படுகிறது. ஆனால் இதனை 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

கான்டாக்ட் லென்ஸ் அணிந்தவர்கள் செய்யக்கூடாதவை:

  1. கான்டாக்ட் லென்ஸ் அணிந்துக்கொண்டு மறந்தும் கூட அப்படியே தூங்க கூடாது.
  2. கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கு முன்போ அல்லது அணிந்த பிறகோ கண்களுக்கு எந்த விதமான அழகு சாதன பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது. 
  3.  நீங்கள் பயன்படுத்தும் லென்ஸை அதற்கு என்று கொடுக்கப்படும் திரவத்தில் ஊறவைத்த பிறகு முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.

பின் விளைவுகள்:

contact lenses for eyesight in tamil

கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் கண்களில் லென்ஸ் இருக்கும் போது அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தினால் ஏற்படும்.

கான்டாக்ட் லென்ஸை அதற்கான திரவம் கொண்டு சுத்தம் செய்யாமல் தண்ணீரையோ அல்லது துணியை வைத்தோ சுத்தம் செய்தால் கண்களில் இன்பெக்சன் ஆகிவிடும். 

கான்டாக்ட் லென்ஸை முறையாக பயன்படுத்தவில்லை என்றால் கண்கள் தெரியாமல் போகும் வாய்ப்பும் கூட இருக்கிறது.

இதையும் படியுங்கள்⇒ கண்பார்வை பல மடங்கு அதிகரிக்க டிப்ஸ்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement