ஐந்து உயிருக்கு ஆபத்தான உணவுகள்..!

Advertisement

ஐந்து உயிருக்கு ஆபத்தான உணவுகள்..! Dangerous Food in Tamil..!

Dangerous Food in Tamil:- வணக்கம் நண்பர்களே முன்பெல்லாம் வயதானபிறகு தான் சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் இப்போது உள்ள காலகட்டத்தில் 30 வயதிலேயே சர்க்கரை நோய், இதய நோய் என்று பலவகையான நோய்களினால் பாதிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று பார்த்தால் நாம் சாப்பிடும் உணவு முறைகளே என்று சொல்லலாம். உண்மையாக நாம் ஆரோக்கியம் என்று நம்பி சாப்பிடும் உணவுகளில்கூட பல ஆபத்துகள் ஒளிந்துள்ளது. அப்படி நம் உடலுக்கு ஆபத்தினை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க..

வெள்ளை சர்க்கரை:-

white sugar

இந்த வெள்ளை சர்க்கரை பார்ப்பதற்கு கண்ணாடி போன்று உதிரி உதிரியாக மிகவும் அழகாக இருக்கும். அழகு என்றாலே ஆபத்துதான் என்று நமக்கு உணவு பொருட்கள் கூட உணர்த்துகிறது. நாட்டு சர்க்கரையுடன் சில வேதி பொருட்களை சேர்த்து படிய வைத்து இந்த வெள்ளை சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இனிப்பு வடிவத்தில் உள்ள ஸ்லோ பாய்சன் என்று இந்த வெள்ளை சர்க்கரையை சொல்லலாம்.

வெள்ளை சர்க்கரையை உணவில் அதிகம் பயன்படுத்தும் பொழுது நம் உடலில் சர்க்கரையின் அளவை மிக வேகமாக அதிகரித்து டைப் 2 சர்க்கரை நோயை மிக எளிதாக உண்டாக்குகின்றது.

இதுமட்டுமல்லாமல் இதய நோய், பல் சொத்தை, உடல் பருமன், சரும நோய், இளமையிலேயே வயதான தோற்றம், கல்லீரலில் கொழுப்பு படிவது போன்ற பிரச்சனைகளையும் இந்த வெள்ளை சர்க்கரை ஏற்படுத்துகிறது.

எனவே உணவில் அதிகம் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதற்கு பதில், நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, அச்சு வெல்லம், தேன் போன்றவற்றை பயன்படுத்துவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

உடல் எடை குறைய சியா விதை எப்படி சாப்பிட வேண்டும்?

மைதா மாவு:-

Maida

மைதா மாவு பெரும்பாலும் கோதுமையிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. மைதா என்பது முளை நீக்கப்பட்ட, எந்த நார்ச்சத்தும், விட்டமின்களும் இல்லாத இரசாயன பொருட்கள் கலந்து தயாரிக்கப்படும் ஒரு மாவு பொருள். இந்த மைதா மாவினை ஹோட்டல், பேக்கரி கடைகள் மற்றும் ரோட்டோரங்களில் விற்கப்படும் உணவகங்களில் அதிகளவு பயன்படுத்துகின்றன. இந்த மைதா சார்ந்த உணவுகளை நாம் அதிகம் உட்கொள்வதினால் அது நேரடியாக கணையத்தில் உள்ள பீட்டா செல்களை அழித்து சர்க்கரை நோயை உண்டாக்கும். மேலும் இவற்றில் உள்ள ஏராளமான வேதி பொருட்கள் உடலில் டாக்சின்ஸ் (TOXINS) அளவை அதிகரித்து புற்று நோய் வர வழிவகுக்கிறது. மேலும் மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்வதினால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

உடலுக்கு பல தீங்குகளை விளைவைக்கக்கூடிய இந்த மைதாவை நாம் உட்கொள்வதை முற்றிலும் தவிர்த்து உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சிறு தானிய உணவுகளை உட்கொள்வது மிகவும் நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட பாக்கெட் சமையல் எண்ணெய்:-

பொதுவாக நாம் சமையலுக்கு அதிகளவு சமையல் எண்ணெய்யை பயன்படுத்துவோம். இந்த சமையல் எண்ணெயில் எந்தவித சத்துக்களும் இல்லை. எந்த சத்துக்களும் இல்லாத இந்த பாக்கெட் எண்ணெய்களை நாம் உட்கொள்ளும் சமையலுக்கு பயன்படுத்தினால் அது மூட்டு தேய்மானம், இதய நோய், செரிமான பிரச்சனைகள் மற்றும் நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவதற்கு பதில் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

பால்:-

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தக்கூடிய பானம் என்றால் அது பால் தான். பால் உண்மையில் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய ஒரு பானம் தான். இருப்பினும் நாம் எந்த வகையான பாலினை பயன்படுத்துகிறோம் என்பதில் அதிக கவனம் தேவை. அதாவது பாலில் இரண்டு வகை உள்ளது A1 பால் மற்றொன்று A2 பால், இவற்றில் A2 பால் தான் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

A2 பால் என்பது நாம் அருகாமையில் இருந்து நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய நாட்டு இன பசுக்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய பால் A2 பால் என்று சொல்லலாம். இந்த பாலில் A2 Beta casein என்கின்ற பொருள் உள்ளது. இது உடலுக்கும், எலும்புகளுக்கும் மிகவும் ஆரோக்கியமானது.

ஆனால் மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பால் என்றால் அது A1 பால். இந்த A1 பால் கலப்பின பசுக்களிடமிருந்து பெறக்கூடிய பால். இந்த பாலில் A1 Beta casein என்கின்ற பொருள் அதிகம் அடங்கியுள்ளது. இந்த பாக்கெட் பாலினை நாம் அதிகம் பயன்படுத்துவதினால் நீரிழிவு நோய், இதய நோய், அடிசன், ஜீரண உறுப்புகளில் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்துவதற்கு இந்த A1 பால் காரணமாக இருக்கின்றது.

எனவே கூடுமான அளவு பசும்பாலினை அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

உப்பு:

பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் உணவுகளுக்கு அயோடின் கலந்த நல்ல வெள்ளை நிறத்தில் உள்ள தூள் உப்புக்களை தான் பயன்படுத்துகின்றோம். இருப்பினும் இந்த தூள் உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. இந்த தூள் உப்பினை நாம் அதிகம் பயன்படுத்தும் பொழுது அது இரத்த கொதிப்பு நோய் வருவதற்கு காரணமாக அமைகின்றது.

இந்த தூள் உப்பை சுத்திகரிப்பதற்கு மற்றும் வெள்ளையாக மாற்றுவதற்கும் Ferrocyanide என்கின்ற நச்சுக்களை பயன்படுத்துகின்றன.  இதனால் கேன்சர் நோய் வருவதற்கும் மிக அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே சமைக்கும் உணவுகளில் இந்த தூள் உப்பினை பயன்படுத்துவதற்கு பதில், மங்கலான நிறத்தில் உள்ள கல் உப்பு மற்றும் இந்துப்பு போன்றவற்றை சமைக்கும் உணவுகளில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஏனென்றால் இந்த கல் உப்பில் தான் நாம் உடலுக்கு தேவையான 84-க்கு அதிகமான தாதுக்கள் அடங்கியுள்ளது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement