பேரிச்சம் பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் | Dates Benefits For Skin
பேரிச்சப்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள், போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. பேரிச்சப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு என்று ஆய்வில் தெரிவித்துள்ளார்கள். பேரிச்சப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லை சரும பிரச்சனைக்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது. அதவாது 15 சரும பிரச்சனைக்கு சிறந்த பொருளாக இருக்கிறது. அது என்னென்ன பிரச்சனைகளை சரி செய்கிறது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
ஃபேஸ் க்ளென்சர்:
பேரிச்சப்பழத்தில் பாந்தோதெனிக் அமிலம் உள்ளது. அதனால் நீங்கள் தினமும் பேரிச்சப்பழம் சாப்பிடுவதால் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும், பளபளப்பாகவும், வைத்திருக்க உதவுகிறது.
கரும்புள்ளிகள் மறைய:
பேரிச்சப்பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி கரும்புள்ளிகளை அகற்றுகிறது. மேலும் சருமத்தை அழகாக வைத்திருக்க உதவுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ பேரிச்சம் பழம் நன்மைகள்
ஸ்கின் எக்ஸ்ஃபோலியேட்டர்:
ஸ்கின் எக்ஸ்ஃபோலியேட்டராகப் பேரிச்சப்பழம் உதவுகிறது. அதற்கு சிறிதளவு பால் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். அதில் பேரிச்சப்பழம் மற்றும் ரவா சேர்த்து ஊறவிடவும். ஊறிய பிறகு மசித்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 3 நிமிடங்களுக்கு ஸ்கிரப் செய்யவும்.
தோல் அரிப்பு:
பேரிச்சப்பழம் தோல் அரிப்பிற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. அதற்கு ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, பேரிச்சைபழம் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை அரிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் அரிப்பிலிருந்து விடுபடலாம்.
வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாக்க:
பேரீச்சம்பழத்தில் உள்ள சத்துக்கள் சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. பேரீச்சம்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை புற ஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இளமை தோற்றத்திலே வைத்திருக்க உதவுகிறது.
தோல் தடிப்பு:
பேரீச்சம்பழத்தில் உள்ள வைட்டமின் சி தோல் தடிப்பை தடுக்கும் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து வரும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்கும்.
ஸ்ட்ரெச் மார்க்ஸ்:
இதில் வைட்டமின் பி நிறைந்துள்ளதால் சரும பிரச்சனைக்கு தீர்வளிப்பதோடு Stretch Marks நீக்குவதற்கும் உதவுகிறது.
தோலில் உள்ள சுருக்கங்கள்:
பேரிச்சப்பழத்தை தினமும் சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின் சி தோலில் சுருக்கங்கள் வராமல் தடுக்ககிறது.
முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு:
பேரிச்சப்பழத்தில் வைட்டமின் பி சத்து உள்ளதால் முகப்பரு வராமல் தடுக்கிறது. மேலும் புரோட்டீன், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.
வறண்ட உதடு:
பேரிச்சப்பழத்தில் வைட்டமின் ஏ உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. தினமும் பேரிச்சைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் வறண்ட உதடு வராமல் பாதுகாக்கிறது.
சருமம் மிருதுவாக:
பேரிச்சப்பழத்தில் வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. அதனால் தினமும் பேரிச்சப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.மேலும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இதையும் படியுங்கள் ⇒ வெறும் வயிற்றில் பாதாம் மற்றும் திராட்சையை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |