இரவு 10 மணிக்கு மேல் மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்கள் தெரியுமா..?

Advertisement

Disadvantages of Using Phone at Night in Tamil

இன்றைய காலத்தில் இரவு 10 மணிக்கு மேல் தான் அனைவரும் தூங்குகின்றனர். சிலர் தூங்காமலும் முழித்து இருக்கின்றனர். அதற்கு முழு காரணமாக இருப்பது மொபைல் மட்டும் தான். ஒருவருக்கொருவர் பேசி சிரிப்பதை விட மொபைலில் மூழ்கி இருப்பதே அதிகமாக இருக்கிறது. அத்தகைய மொபைலில் எந்த அளவிற்கு நம்முடைய பயன்பாடு இருக்கிறதோ அந்த அளவிற்கு பின்விளைவுகளும் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் இந்த மொபைலை இரவு 10 மணிக்கு மேல் பயன்படுத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துக்கொண்டு போதுமான அளவு மொபைலின் பயன்பாட்டை குறைத்து கொள்ளலாம் வாங்க..!

இரவு 10 மணிக்கு மேல் மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:

மனிதர்களுடைய தூக்கம் என்பது குறைந்தது 6 முதல் 8 மணி நேரமாவது கட்டாயமாக தூங்க வேண்டும். ஆனால் இந்த காலத்தில் யாரும் அப்படி தூங்குவதில்லை. ஏனென்றால் அனைவரும் அதிகமாக மொபைல் பயன்படுத்துகின்றனர்.

ஆகையால் இரவு 10 மணிக்கு மேல் மொபைல் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தூக்கமின்மைக்கு காரணம்:

தூக்கமின்மைக்கு காரணம்

நீங்கள் இரவு 10 மணிக்கு மேல் மொபைல் பயன்படுத்துவதால் அதிலிருந்து வரும் வெளிச்சத்தினால் நமது மூளையில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சரியாக சுரக்காமல் தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கிறது.

மாரடைப்பு வர காரணம்:

மாரடைப்பு வர காரணம்

நீங்கள் சரியாக தூங்காமல் மொபைல் பயன்படுத்துக்கிறீர்கள் அல்லது மொபைலில் வேலை செய்கிறீர்கள் என்றால் அது மாரடைப்பு வருவதற்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் நெஞ்சு எரிச்சல்  போன்ற பிரச்சனைகளும் வரும்.

புற்றுநோய் வர காரணம்:

புற்றுநோய் வர காரணம்

இரவு நேரத்தில் நீங்கள் அதிகாமாக மொபைல் பயன்படுத்துவிட்டு காலையில் அதிக நேரம் தூங்கினால் அது சரியான தூக்கமாக உங்களது உடல்  ஏற்றுக்கொள்ளாது. இது மாதிரி தொடர்ந்து நீங்கள் செய்தால் ஒரு கட்டத்திற்கு மேல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று மருத்துவரின் ஆலோசனை படி கூறப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணம்:

நோய் எதிர்ப்பு சக்தி குறைய காரணம்

தொடர்ச்சியாக நீங்கள் இரவு நேரங்களில் மொபைல் பயன்படுத்திவிட்டு பகல் நேரங்களில் தூங்குவீர்கள் என்றால் உங்களுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து உங்களுடைய ஆயுட்காலம் குறையவும் வாய்ப்பு உள்ளது என்ற மருத்துவரின் ஆலோசனை படி சொல்லப்படுகிறது.

ஆகையால் இனி நீங்கள் போதுமான அளவு மொபைல் பயன்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மொபைல் பயன்படுத்தினால் தூங்க செல்வதற்கு முன்பு 10 நிமிடம் மட்டும் பயன்படுத்துங்கள் மற்றும் நீங்கள் படுத்து இருக்கும் இடத்திலிருந்து 10 மீட்டர் இடைவெளி விட்டு மொபைலை வைய்யுங்கள். 

இதையும் படியுங்கள்⇒ குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement