இலந்தை பழத்தின் நன்மைகள்..!

Elantha Pazham Benefits in Tamil

இலந்தை பழம் நன்மைகள் | Elantha Pazham Benefits in Tamil

இன்றைய காலகட்டத்தில் பலவகையான பழங்களை நாம் மறந்து போய்கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இலந்தை பழமும் இடம் பெற்றுள்ளது. இந்த இலந்தை பழத்தில் பலவகையான சத்துக்கள் இருக்கிறது.. அதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

எலும்புகள் வலுப்பெறும்:

பொதுவாக நமது உடலில் கால்சியம் சத்து குறைவாக இருக்கிறது என்றால் எலும்புகள் பலமிழந்து போயிடும். ஆகவே உடலில் கால்சியம் சத்து அதிகரிக்க தினமும் சிறிதளவு இலந்தை பழம் சாப்பிட்டு வர உடலில் கால்சியம் அதிகரிக்க ஆரம்பிக்கும் இதனால் எலும்புகள் மற்றும் பற்கள் பலம்பெறும்.

தலைசுற்றல் சரியாக:

இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் பித்தம் சமநிலையாக இருக்கும். சிலருக்கு கார் அல்லது பேருந்தில் பயணம் செய்யும் போது வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் இலந்தைப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

உடல் உஷ்ணம் குணமாக:

பொதுவாக கோடைகாலங்களில் வெப்பம் அதிகமாகவே இருக்கும் இதன் காரணமாக  உடல் எளிதில் வெப்பமடைந்து அதிக வியர்வை மற்றும் நீர் சத்து இழப்பு ஏற்படுகிறது. இலந்தை பழம் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை வாய்ந்தது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் இலந்தை பழங்களை சாப்பிடுவதால் உடற்சூடு தணிந்து, நீர் சத்து இழப்பை சரி செய்கிறது.

உடல் வலி:

பொதுவாக யாராக இருந்தாலும் அதிக பணிச்சுமை இருந்தாலே அடிக்கடி உடல்வலி ஏற்படும். அதன் பிறகு அவர்கள் சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும் இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் தினமும் இலந்தைப் பழம் சாப்பிட்டு வாருங்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

செரிமான சக்தியை அதிகரிக்க:

பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

மேலும் இதன் தொடர்ச்சியை எடுத்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் நன்றி வணக்கம்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்