வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் | Empty Stomach Drinking Water benefits in tamil

Thanneer Kudithal Erpadum Nanmaigal

 Thanneer Kudithal Erpadum Nanmaigal

நண்பர்களே வணக்கம்.! இன்றைய ஆரோக்கியம் பதிவில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் என்னென்ன நன்மைகள் என்று தான் காணப்போகிறோம். தண்ணீர் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரியும். அதற்காக தண்ணீர் மட்டும் குடித்தால் போதுமா என்று கேட்கக்கூடாது அது தவறு. தண்ணீர் குடிப்பதற்கு சில முறைகள் உண்டு.

நாம் காலையில் எழுந்தவுடன் டீ, காப்பி, பால் போன்றவை குடிப்போம். சில நபர்கள் மட்டும் தான் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பார்கள். அவர்களுக்கும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா என்று தெரியாது. நாங்கள் சொல்கிறோம் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால என்னென்ன நன்மைகள் என்று இதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லதா? கெட்டதா?

தண்ணீர் குடிக்கும் அளவு: 

 Empty Stomach Drinking Water benefits in tamil

ஒரு நாளைக்கு மனிதன் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை குடிப்பது அவசியமாகும். அதுபோல் வெறும் வயிற்றில் 1/2 லிட்டர் முதல் 1 லிட்டர் வரை குடிக்கலாம். இது போல் தண்ணீர் குடிக்கும் போது நம் உடலுக்கு சில நன்மைகள் வந்து சேர்கின்றது. அது என்னென்னை என்பதை காண்போம்.

மலம் நன்றாக வெளியேற:

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் முதன்மையானது குடலை சுத்தப்படுத்தும். தண்ணீர் குடித்தவுடன் சிறிது நேரத்திலே மலம் கழித்துவிடுவீர்கள். சில நபர்களுக்கு மலம் கழிப்பதற்கு கஷ்டப்படுவார்கள். அவர்கள் எல்லாரும் இனிமேல் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுங்கள்.

பசி உணர்வு: 

Thanneer Kudithal Erpadum Nanmaigal

தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சு கிருமிகளை வெளியேற்றி பசி உணர்வை தூண்டும். பணிக்கு செல்பவர்கள், குழந்தைகள் காலையில் பசியே இல்லை என்று சொல்வார்கள். அவர்களை தண்ணீர் பருக சொல்லுங்கள். அதன் பிறகு அவர்களே சொல்லுவார்கள் நல்லா பசிக்குது என்று சொல்வார்கள்.

தலைவலி தடுக்க:

Thanneer Kudithal Erpadum Nanmaigal 

சில நபர்களுக்கு நீர்ச்சத்து குறைவினால் தலைவலி ஏற்படும். அவர்கள் எல்லாரும் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் உடலின் நீர்ச்சத்து அதிகரித்து தலைவலி வராமல் தடுக்கும்.

சுறுசுறுப்பாக இருப்பது எப்படி:

empty stomach drinking water benefits in tamil

தண்ணீரை வெறும் வயிற்றை குடிப்பதால் இரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி பெற்று, இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை கொண்டிருக்கும். இதனால் நாம் உடலானது சுறுசுறுப்பாக இருக்கும்.

உடல் எடை குறைய:

empty stomach drinking water benefits in tamil

எடையை குறைக்க நினைத்தால் தண்ணீரை வெறும் வயிற்றில் குடியுங்கள். உடலில் தங்கியுள்ள நச்சுகளுடன், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை குறைத்து விடும்.

சருமம் அழகு பெற:

empty stomach drinking water benefits in tamil

குடலானது சுத்தமாக இல்லையென்றால் முகத்தில் பருக்கள் வரும். அப்படி பருக்கள் வந்தால் முகம் அழகாக இருக்காது. குடல் சீராக இருந்தால் தான் முகம் அழகாக இருக்கும். ஆதலால் தினமும் தண்ணீரை வெறும் வயிற்றில் பருகுங்கள்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

empty stomach drinking water benefits in tamil

தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து உடலில் நோய்கள் வராமல் பாதுகாக்கும். அதனால் தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் பருகுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil