உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை தவறாமல் சாப்பிடுங்கள்

foods to eat for a healthy heart in tamil

Foods To Eat For A Healthy Heart in Tamil

அன்பான நேயர்களுக்கு வணக்கம்… இன்றைய ஆரோக்கியம் பதிவில் இதயம் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நாம் தினமும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் நாம் வேலைக்கு செல்லும் அவசரத்தில் கிடைத்த உணவுகளை சாப்பிடுகிறோம்.

ஆரோக்கியமான உணவு என்ற வார்த்தையே குறைந்து விட்டது. நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்து சத்தான உணவுகள் என்று சொல்ல முடியாது. அதனால் சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அந்த வகையில் இதயம் ஆரோக்கியத்தை காக்கும் உணவுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..!

நரம்புகள் பலம் பெற சாப்பிடவேண்டிய உணவுகள்

இதயம் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:

நம் உடலில் இருக்கும் உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பு தான் இதயம். இதயம் ஒழுங்காக செயல்படவில்லை என்றால் நாம் உயிர் வாழ முடியாது. இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம் உடல் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும். நம் இதயத்தை எப்படி பாதுகாப்பது என்று யோசிக்கிறீர்களா..? இதயம் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலே போதும். அந்த உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

சால்மன் மீன்:

சால்மன் மீன்

சால்மன் மீன் வாரம் ஒரு முறையாவது  உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன.

இந்த மீனில் இருக்கும் சத்துக்கள் இரத்தம் உறைவதை தடுத்து சீரான இரத்த ஓட்டத்தை கொடுக்கின்றன. மேலும் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இந்த சால்மன் மீனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் இதயநோய்கள் வராமல் தடுக்கலாம்.

ஆலிவ் ஆயில்: 

ஆலிவ் ஆயில்

ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான எண்ணெய் என்பதால் அது சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மற்ற உணவுகளை விட ஆலிவ் ஆயிலில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாகவே இருக்கின்றன.

இதில் இருக்கும் சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இரத்த ஓட்டத்தில் இருக்கும் தடையை உடைக்கிறது. இது இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.

உப்பு இல்லாத உணவுகள்:

உப்பு இல்லாத உணவுகள்

உப்பு இல்லாத உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் குறைந்த அளவே உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

அதிகளவு உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்தை கெடுக்கிறது. அதனால் உப்பு இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும்.

சிவப்பு திராட்சை:

சிவப்பு திராட்சை

சிவப்பு திராட்சையில் ரெஸ்வெராட்ரால் என்னும் வேதி பொருள் இருப்பதால் அது இரத்தத்தில் உள்ள இரத்த வட்டுக்கள் ஒன்றோடு ஓன்று ஒட்டிக் கொள்ளாமல் இருக்க உதவுகிறது.

சிவப்பு திராட்சை தினசரி சாப்பிட்டு வருவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்