பாதங்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்..! Foot Massage Benefits..!

Advertisement

 Foot Massage Benefits..!

Foot massage benefits:- நம் உடலின் ஒவ்வொரு பகுதிகளும் அதற்கான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அந்த வகையில் பாதங்களும் முக்கியதுவத்தை பெற்றுள்ளது. பாதங்களுக்கு நாம் தினமும் எண்ணெய் மசாஜ் செய்வதினால் நம் உடலில் ஏராளமான நன்மைகள் நிகழும். குறிப்பாக ஆயுர்வேத எண்ணெயினை பயன்படுத்தி பாதங்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதினால் நரம்பு அழுத்தம் நீக்கப்பட்டு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

சரி இந்த பதிவில் பாதங்களுக்கு எண்ணெய் மசாஜ் (Foot massage benefits) செய்வதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி படித்தறிவோம் வாங்க.

2 நிமிடத்தில் உடல் சூடு குறைய – அருமையான வழி..!Udal soodu…

 Importance of Foot Massage..!

ஆயில் மசாஜ் பயன்கள் / Foot Massage Benefits: 1

மருத்துவ சிகிச்சையில் மிகவும் பயனுள்ள ஓர் சிகிச்சைதான், மசாஜ் தெரபி. அதாவது உடலில் சில பகுதிகளில் அழுத்தம் கொடுப்பதினால் டென்சன் குறைவதோடு, மன அழுத்தம் நீங்கி மனம் ரிலாக்ஸ் அடைகிறது. மசாஜ் தெரபியில் ஒரு பகுதி தான் ரிப்ளக்ஸாலஜி என்னும் பாத அழுத்த முறை.

ஆயில் மசாஜ் பயன்கள் / Foot Massage Benefits: 2

ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களுடன் நேரடி தொடர்புடைய பல்வேறு உடலுறுப்புக்களில் உள்ள பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் ? Thoppul Oil massage…

ஆயில் மசாஜ் பயன்கள் / importance of foot massage: 3

பாதங்களில் ஒருவர் தினமும் மசாஜ் செய்து வந்தால், அதனால் மன அழுத்தம் குறையும், உடல் ரிலாக்ஸ் அடையும், உடலில் இரத்த ஓட்டம் தூண்டப்படும், தூக்க பிரச்சனைகள் தடுக்கப்படும், செரிமான பிரச்சனைகள் விலகும் மற்றும் சரும ஆரோக்கியம் மேம்படும்.

ஆயில் மசாஜ் பயன்கள் / Foot massage benefits: 4

முக்கியமாக கர்ப்பிணிகள் இரவில் படுக்கும் போது பாத மசாஜ் செய்து வந்தால், உடலில் நீர்த்தேக்கத்தில் ஏற்படும் கால் வீக்கத்தைத் தடுக்க முடியும். உதாரணமாக, காலின் பெருவிரலோடு மூளை மற்றும் நுரையீரல் நேரடி தொடர்புக் கொண்டுள்ளது.

ஆயில் மசாஜ் பயன்கள் / importance of foot massage: 5

எனவே பெருவிரலில் மசாஜ் செய்தால் மூளை மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும். காலின் இரண்டாம், மூன்றாம், நான்காம் விரல்களில் கொடுக்கப்படும் அழுத்தம் பல் வலிக்கு உடனடி நிவாரணம் தரும். கடைசி சிறு விரல் காது வலியைக் குறைக்கும்.

ஆகவே தினமும் இரவில் படுக்கும் முன் சிறிது நேரம் பாதங்களை மசாஜ் செய்து விட்டு உறங்குங்கள். இதனால் உங்களுக்கு தெரியாமலேயே பல நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள்.

குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்யனுமா?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement