இஞ்சியை யார் எல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா..?

Advertisement

Ginger Side Effects And Who Should Never Use It in Tamil

வணக்கம் நண்பர்களே..! நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் செரிமானத்திற்காக இஞ்சி சேர்ப்பது நடைமுறையில் உள்ள ஒன்று. சைவம், அசைவம் எந்த உணவாக இருந்தாலும் அந்த சாப்பாட்டில் இஞ்சியை சேர்க்கின்றனர். இஞ்சி சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றாலும் அதில் நமக்கு தெரியாத பக்கவிளைவுகளும் இருக்கின்றன. எதையும் நாம் அளவோடு சாப்பிட வேண்டும். அப்படி இல்லை என்றால் அது நம்முடைய உடலுக்கு ஆபத்து தான்.  அது மட்டும் இல்லாமல் இஞ்சியை யார் எல்லாம் சாப்பிட கூடாது என்று பலருக்கும் தெரியாது. ஆகவே இன்றைய ஆரோக்கிய பதிவில் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் யார் எல்லாம் சாப்பிட்டில் இருந்து இஞ்சியை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி            உங்களுக்கு தெரியுமா…?

இஞ்சியின் தீமைகள்:

இஞ்சியின் தீமைகள்

இஞ்சி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு 4 கிராம் அளவு மட்டுமே இஞ்சியை சாப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். அது தான் நம்முடைய உடம்பிற்கு ஏற்ற இஞ்சியின் அளவு என்று சொல்லப்படுகிறது.

தினமும் நாம் சாப்பிடும் உணவில் இஞ்சியை அதிகமாக சாப்பிட்டால் வயிறு வீக்கம், வயிறு கோளாறு, இதய பகுதிகளில் பிரச்சனை போன்றவை வர வாய்ப்பு இருக்கிறது.

இஞ்சியை யார் எல்லாம் சாப்பிட கூடாது:

கர்ப்பிணி பெண்கள்:

கர்ப்பிணி பெண்கள்

இஞ்சியில் செரிமானத்திற்கு தேவையான அதிகமாக சத்துக்கள் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இஞ்சியை சாப்பிட கூடாது. ஏனென்றால் இஞ்சி கர்ப்பிணி பெண்களின் வயிறு சுருக்கம் மற்றும் குறை பிரசவம் போனவற்றைக்கு வழிவகுக்கிறது. அதனால் கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனை படி சாப்பாட்டில் இஞ்சி சேர்த்து கொள்ள வேண்டும்.

பித்தப்பை கல்:

பித்தப்பை கல்

பித்தப்பையில் கல் உள்ளவர்கள் இஞ்சி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் பித்தப்பையில் நீர் சுரக்க வைப்பதற்கு இஞ்சி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதனால் பித்தப்பையில் கல் உள்ளவர்கள் இஞ்சி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.

அல்சர் உள்ளவர்கள்:

அல்சர் உள்ளவர்

 

அல்சர் உள்ளவர்கள் இஞ்சியை பேஸ்ட் போல நன்றாக அரைத்து தான் சாப்பாட்டில் எடுத்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் இஞ்சி அல்சர் உள்ளவரின் குடலிற்கு சென்று அடைப்பை ஏற்படுத்துகிறது.

அறுவை சிகிச்சை:

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை செய்ய உள்ளவர்கள் இஞ்சி சாப்பிட கூடாது. ஏனென்றால் அவர்களுக்கு அறுவை சிகிச்சையின் போது இரத்த போக்கு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

உடல் எடை குறைவு:

உடல் எடை குறைவு

உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இஞ்சி சாப்பிடும் போது வயிற்றில் செரிமானத்திற்கு தேவையான ஹார்மோன்கள் உருவாகிறது நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டை எளிதில் செரிமானம் செய்து வயிற்றில் ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் உடல் எடை குறைவாக உள்ளவர்கள் இஞ்சி சாப்பிட கூடாது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil

 

Advertisement