குல்கந்து நன்மைகள் | Gulkand Benefits in Tamil

Gulkand Benefits in Tamil

ரோஜா குல்கந்து நன்மைகள் | Rose Gulkand Benefits in Tamil

உலகில் பல வகையான மலர்கள் இருந்தாலும் மக்களால் அதிகமாக விரும்பப்படுவது ரோஜா மலர்கள் தான். இந்த ரோஜா செடியில் பூக்கும் ரோஜா மலரிலிருந்து செய்யப்படும் ஒரு மருத்துவ குணமிக்க உணவுப்பொருள் தான் “ரோஜா குல்கந்து”. உடலில் சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் இப்போது மருத்துவரை அணுகிவிடுகிறோம். நம் உடலில் ஏற்படும் நோய்களை ஆரம்ப கட்டத்திலே அறிந்தால் நாமே கை வைத்தியம் மூலம் அதனை சரி செய்யலாம். இந்த ரோஜா குல்கந்தானது அதிக மருத்துவ குணம் கொண்டது. ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் (gulkand benefits in tamil) நம் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..

பனங்கற்கண்டு நன்மைகள்

மலச்சிக்கல் சரியாக:

 gulkand benefits in tamil

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனையில் ஒன்று இந்த மலச்சிக்கல். மலசிக்கல் பிரச்சனை இருக்கும் போது குல்கந்தை வெந்நீரில் கலந்து குடித்துவர மலசிக்கல் குணமாகும். கர்ப்பிணி பெண்கள் மலசிக்கல் மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைக்கும் இந்த குல்கந்தை வெந்நீரில் கலந்து இரவு நேரத்தில் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

உடல் துர்நாற்றம் நீங்க:

 rose gulkand benefits in tamil

குல்கந்து நன்மைகள்: ஒரு சிலருக்கு உடலில் எப்போதும் வியர்வை இருந்துக்கொண்டே இருக்கும். அது போன்று அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கும் உடல் துர்நாற்றமானது அதிகமாக இருக்கும். குல்கந்தானது வியர்வையினால் உண்டாகும் விஷ தன்மையை உடலில் இருந்து நீக்கி உடலை குளிர வைக்கிறது. கோடை காலத்தில் வியர்வை அதிகம் ஏற்படுபவர்கள் குல்கந்து அதிகமாக சாப்பிடலாம்.

பித்தம் நீங்க:

 குல்கந்து நன்மைகள்

பித்த நோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்த ரோஜா குல்கந்து மிகவும் உதவியாக இருக்கிறது. உடலில் பித்தம் அதிகரிக்கும் போது தலை சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. பித்தம் குணமாக ரோஜா இதழ்களை கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை குடித்து வந்தால் பித்தம் நீங்கும். பித்த பிரட்டல் நீங்க ரோஜா குல்கந்து எடுத்துகொள்ளலாம்.

ஜாதிக்காய் மருத்துவ பயன்கள்

வாய்ப்புண் குணமாக:

 benefits of gulkand in tamil

உடலில் அதிகமாக உஷ்ணம் ஏற்படும் போதும், காரம் சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் சிலருக்கு வாயில் புண்கள் ஏற்படுகிறது. வாய்ப்புண் சரியாக ரசாயன பொருள்களை பயன்படுத்துவதைவிட ரோஜா குல்கந்து சிறந்த பலனை கொடுக்கிறது. குல்கந்து உடலில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை அதிகப்படுத்தி, வாய்புண் உருவாகுவதை குறைத்து விடுகிறது. வாய்ப்புண்ணினால் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலிகளையும் உடனடியாக குறைத்து விடுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு:

 gulkand benefits for weight loss in tamil

நமது உடலின் முக்கிய உறுப்பாக இருப்பது இதயம். இதயத்திற்கு நலத்தை தருகின்ற உணவுகள் மற்றும் மூலிகைகளை சாப்பிட்டு வருவது நல்லது. ரோஜா குல்கந்து சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்