முடி உதிர்வை தடுத்து முடி ஆரோக்கியமாக வளர இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.!

Advertisement

முடி உதிர்வதை தடுக்கும் உணவுகள்

பொதுவாக ஆணாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி ஒருவருக்கு அழகை கூட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது. அனைவருக்கும் முடி அடர்த்தியாகவும், நீளமாவும் இருக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ஆனால் ஆண்களுக்கு முடி கொட்டினால் சொட்டை ஆகி விடும். ஆண்களுக்கு சொட்டை விழுந்தால் வயதானவர் போல் உருவத்தை காட்டும். முடி வளர வேண்டும் என்ற ஆசையை விட இருக்கிற முடி உதிராமல் இருந்தால் போதும் என்று நினைப்பார்கள். இப்படி நினைக்கிறவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்று சொல்வார்களே அது போல முடி உதிராமலும், முடி வளரவும் இந்த உணவுகளை சாப்பிட்டால் போதுமானது. அது என்னென்ன உணவுகள் என்று தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படியுங்கள் ⇒ அரிசி ஊறவைத்த தண்ணீர் முடி வளர்ச்சிக்கும், முகம் பொலிவு பெற முடியும் தெரியுமா உங்களுக்கு

வைட்டமின் ஏ உணவுகள்:

வைட்டமின் ஏ உணவுகள்

நம் உடலில் வைட்டமின் ஏ சத்து குறைவாக இருந்தால் முடி உதிர்வு ஏற்படும். அதனால் உணவில் இனிப்பு உருளைக்கிழங்கை சேர்த்து கொள்வதால் உங்களுது முடிக்கு தேவையான வைட்டமின் ஏ சத்து கிடைக்கிறது. இதனால் முடி உதிர்வை நிறுத்தி முடியை பளபளப்பாக்கும்.

வைட்டமின் சி பழங்கள்:

வைட்டமின் சி பழங்கள்

முடி உதிர்வை தடுப்பதற்கு சிறந்த பழம் கிவி பழம். இந்த பழத்தை சாப்பிடுவதால் முடி உதிராமல், ஆரோக்கியமாக முடி வளர உதவுகிறது.

வைட்டமின் சி பழங்களான எலுமிச்சை, நெல்லிக்காய், முலாம்பழம், கொய்யா, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சி போன்ற பழங்களிலும் அதிகம் நிறைந்துள்ளது.

புரோட்டீன் நிறைந்த உணவுகள்:

புரோட்டீன் நிறைந்த உணவுகள்

புரோட்டீன் நிறைந்த முட்டையை உணவில் சேர்ப்பதால் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் சரும பாதுகாப்பிற்கும் முட்டை சிறந்த உணவாகும்.

மீன் உணவுகள்:

மீன் உணவுகள்

சால்மன், சூரை, மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகளில் ஒமேகா -3 கொழுப்பு நிறைந்த சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த மீன் வகை உணவுகளை சாப்பிடும் பொழுது முடி ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

முடி வளர்ச்சிக்கு இரும்பு சத்து உணவுகள்:

முடி வளர்ச்சிக்கு இரும்பு சத்து உணவுகள்

முடி உதிர்வு பிரச்சனைக்கு முக்கியமான காரணம் இரும்பு சத்து குறைபாடு தான். அதனால் முடி உதிராமல் இருப்பதற்கும், முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கும் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த இரும்பு சத்து பச்சை காய்கறிகள், முட்டைகோஸ், பீன்ஸ், ப்ரோக்கோலி, கீரைகள், பச்சைபட்டாணி போன்ற காய்கறிகலில் நிறைந்துள்ளது.

மேல் கூறப்பட்டுள்ள உணவுகளை அன்றாட வாழ்க்கையில் எடுத்து கொள்வதால் முடி உதிர்வை நிறுத்தி முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம். இந்த பதிவை படிப்பதோடு நிறுத்தி விடாமல் இந்த உணவுகளை சாப்பிட்டு முடியை காப்பாற்றி கொள்ளுங்கள் நண்பர்களே..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

 

Advertisement