ஹாலா பழம் எப்படி இருக்கும் தெரியுமா…!

hala fruit in tamil

ஹாலா பழம் என்றால் என்ன 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ஹாலா பழத்தின் மருத்துவ குணங்களை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். இந்த உலகில் ஏராளமான பழங்கள் உள்ளன, அதில் வித்தியாசமான ஒரு பழம்தான் இந்த ஹாலா பழமாகும். இந்த பழமானது தென்கிழக்கு ஆசியா, கிழக்கு ஆஸ்திரேலியா, பசுபிக் தீவுகள் மற்றும் ஹவாய் போன்ற நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஹாலா பழமானது பாண்டனஸ் இனத்தை சேர்ந்தது. இவை 760 வகை மரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த மரம் பார்ப்பதற்கு பனை மரம் வடிவில் தான் அமைந்திருக்கிறது. மேலும் இதனுடைய விவரங்களை நம் பதிவில் மூலம் தெளிவாக காணலாம் வாங்க.

துரியன் பழத்தின் நன்மைகள்

 

 ஹாலா பழத்தின் சுவைகள்:

ஹாலா பழத்தின் பச்சை நிற வெளிப்புறம் பகுதியானது அதிக நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது.

இந்த ஹாலா பழத்தின் சுவையானது கரும்பு சாற்றின் சுவை, மாம்பழம் மற்றும் தேன் போன்ற சுவையில் இருக்கும்.

இந்த பழத்தின் ஒவ்வொரு சுவையின் உட்புறமும் கூல் போல இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

பசுபிக்கு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த பச்சையான பழத்தை  தேங்காய் துருவல் சேர்த்து வேகவைத்தும் அப்படியில்லை என்றால் அந்த பழத்தை அரைத்து சாப்பிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஹாலா பழத்தின் மருத்துவ குணங்கள்:

hala fruit

இந்த ஹாலாபழம்  மரத்தின் வேர்களில் பல மூலிகைகளுக்கும், மருத்துவ குணங்களுக்கும், பல ஆரோக்கிய நன்மைகளுக்கும்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த பலத்தினுடைய இலைகள் சளி, காய்ச்சல், ஆஸ்துமா, புற்றுநோய், வாந்தி போன்றவைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஹாலா பழத்தின் ஆண் பூக்களின் மகரந்தங்கள் காது வலி மற்றும் தலைவலிக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஹாலா பழமானது பல ஆற்றல்களையும் தருகிறது, அதுமட்டுமில்லாமல் மனநோய்களில் இருந்து பாதுகாத்து உடல் சேர்வுகளையும் தவிர்க்கிறது.

இந்த பழத்தில் அதிகம் நார்ச்சத்துக்கள் இருப்பதால்  இதய ஆரோக்கியத்திற்கு இது பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது.

ஹாலா பழம்  இரத்தத்தை அதிகரித்து இதய நோயில் இருந்து பாதுகாக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த ஹாலா பழம்  உடல் நலத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல் மனதையும் பாதுகாப்பதற்கு பயன்படுகிறது. மனஅழுத்தத்தை குறைத்து சுறுசுறுப்பாக இருப்பதற்கு இந்த பழமானது பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

உடலில் ஏற்பட கூடிய செரிமான கோளாறுகள், மலச்சிக்கல், உடல் வீக்கம், வாய்வு பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது.

இதில் காணப்படும் நார்ச்சத்துக்கள் உடல் எடையை சில நாள்களில் குறைப்பதற்கு இந்த பழம் சாப்பிட்டு வருகிறார்கள்.

மேலும் இந்த ஹாலா பழமானது சாப்பிடும் போது. அவர்களுக்கு பசியை தூண்டாது.

பசுபிக் தீவுகளில் வசித்து வரும் மக்கள் இந்த பழத்தை தலைவலி, ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகளை  போக்குவதற்கும் இந்த பழத்தை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

தலை முடி உதிர்வு மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு இந்த பழம் பயன்படுத்தபடுகிறது. இந்த பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்