ஆப்பாயில் நன்மைகள்
உலகத்தில் உள்ள அத்தனை பேருக்கும் ஆப்பாயில் பிடிக்கும். முட்டையை அவித்து கொடுத்தால் யாரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் முட்டையை பொரித்து அல்லது வறுவல் அல்லது ஆப்பாயில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையில் புரத சத்து அதிகமாக இருப்பதால் சாப்பிடுவது நல்லது. பொறித்த முட்டையை சாப்பிடுவதை விட ஆப்பாயில் சாப்பிடுவது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. வாங்க என்னென்னெ நன்மைகள் அளிக்கிறது மற்றும் சில நபர்கள் ஆப்பாயில் சாப்பிட கூடாது என்றெல்லாம் தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ முட்டை அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு..?
ஆப்பாயில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
அமினோ ஆசிட், செலினியம், வைட்டமின் டி, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, மினரல் சத்துகள், உள்ளிட்ட பல்வேறு சத்துகளை முட்டை கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒமேகா பேட்டி ஆசிட் 3 நிறைந்திருப்பதால், இதயத்திற்கு மிகவும் நல்லது.
ஆபாயிலில் மஞ்சள் கரு அரை பதத்தில் வெந்திருப்பதால் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதற்கு ஆப்பாயில் சாப்பிடலாம்.
பொறித்த முட்டையை விட ஆபாயிலில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளது. அன்றாட வாழ்க்கையில் தோராயமாக 700 மைக்ரோ கிராம் வைட்டமின்கள் தேவைப்படுகிறது. அதுவே ஆண்களுக்கு 900 மைக்ரோ கிராம் வைட்டமின்கள் தேவைப்படுகிறது. தோராயமாக 74 மைக்ரோ கிராம் ஆப்பாயில் சாப்பிட்டால் கிடைத்துவிடும்.
ஆபாயிலை யார் சாப்பிடலாம்.? யார் சாப்பிட கூடாது.?
இதய பிரச்சனை உள்ளவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் ஆப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சுகர் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் ஆபாயிலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
உடலில் பிரச்சனை ஏதும் இருந்து அதற்கு மாத்திரை எடுத்து கொள்பவராக இருந்தாலும் ஆப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாதவர்கள் ஆபாயிலை தாராளமாக சாப்பிடலாம்.
உடல் எடை அதிக படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆப்பாயில் சிறந்த மருந்தாக இருக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |