சாலியா விதை மருத்துவ பயன்கள் | Halim Seeds in Tamil

Halim Seeds in Tamil

சாலியா விதை எப்படி சாப்பிடும் முறை | Halim Seeds in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் சாலியா விதையின் பயன்களை பற்றி தான் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். சாலியா விதையும், ஆளி விதையும் ஒன்று தான் என்று பலர் நினைக்கின்றன. ஆனால் இவை இரண்டுமே வெவ்வேறு விதைகள் ஆகும். சாலியா விதியை Halim Seeds என்று அழைப்பார்கள். ஆளி விதையை Flax Seeds என்று அழைப்பார்கள். சாலியா விதையை ஆங்கிலத்தில் Garden Cress Seeds என்று அழைப்பார்கள். இந்த சாலியாவிதையின் நியூட்ரிஷனல் பெனிபிட்ஸ் என்னென்ன என்பதை பற்றி முதலில் அறிந்துகொள்ளுங்கள். தினமும் இந்த சாலியா விதையை 15 கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் உடலில் ஏராளமான நன்மைகள் நிகழும். சரி வாங்க சாலியா விதையில் உள்ள பயன்கள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

15 கிராம் சாலியா விதையில் உள்ள சத்துக்கள்:halim seeds in tamil

  • 4 கிராம் புரோட்டீன்
  • 6 கிராம் கார்போஹைட்ரேட்
  • 1 கிராம் நார்ச்சத்து
  • மீனம் நமது உடலுக்கு நம்மை அளிக்கக்கூடிய நல்ல கொழுப்பு சத்துக்களும் உள்ளதாம்.
  • மேலும் இவற்றில் இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் B1, B2, B3 ஆகிய  சத்துக்கள் உள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சப்ஜா விதைகளை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

உடல் எடை குறைய:

தினமும் இந்த சாலியா விதையை 15 கிராம் காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால் பசியின்மையை தூண்டும். ஆக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளலாம்.

இரத்த சோகை குணமாக:

இரத்த சோகை குணமாக வேண்டும் என்று நினைப்பவர்கள். தினமும் சாலியா விதையை எடுத்துக்கொள்ளலாம். இதனை எடுத்துக்கொள்வதினால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்த சோகை நோய் குணப்படுத்தும்.

சாலியா விதை பயன்கள்:

நமது உடலில் தாது உறிஞ்சுதலை அதிகரிக்க வைட்டமின் C தேவைப்படும். சாலியா விதையில் வைட்டமின் C உள்ளது.

சாலியா விதையில் Galactagogue பண்புகள் உள்ளது. இது தாய்மார்களின் பால் உற்பத்தியை அதிகரித்து, பராமரிக்கவும் உதவுகிறது.

இந்த சாலியா விதையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்க வைக்கும் பைட்டோ கெமிக்கல் உள்ளது.

சாலியா விதை இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளும்.

இந்த விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, இருமல், காய்ச்சல், தொண்டை புண் இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

இவற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனையை சரி செய்ய உதவி செய்கிறது.

குறிப்பு: 

உங்கள் மருத்துவரிடம் அறிவுரை கேட்டபிறகு இந்த விதையை சாப்பிடுங்கள் என்று பரிந்துரைக்கிறோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆளி விதை மருத்துவ குணங்கள்..!

சாலியா விதை எப்படி சாப்பிடும் முறை:

  • இந்த விதையை ஊறவைத்து பாலில் கலந்து சாப்பிடலாம்.
  • பழங்களுடன் கலந்து சாப்பிடலாம்.
  • இனிப்பு பண்டங்களில் பொடி செய்து கலந்து சாப்பிடலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil