மூலிகை தேநீர்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் உடலுக்கு பல ஆரோக்கியங்களை தரும் மூலிகை டீ நன்மைகளை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாகவே பால் கலக்காமல் தண்ணீரில் மூலிகை சேர்த்து குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகளை அளித்து வந்தாலும், பால் செலவுகளையும் கட்டுப்படுத்துகிறது. சிலருக்கு காலை எழுந்தவுடன் டீ, காபி குடித்தால் தான் அந்த நாளே ஓடும் என்று நினைப்பவர்களும் இருப்பார்கள். மேலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் இயற்கையான மூலிகை தேநீர் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உடல் எடையை குறைக்க ரோஜா பூ தேநீர் |
மூலிகை டீ நன்மைகள்:
ஆவாரம்பூ தேநீர்:
முதலில் காம்பு நீக்கிய ஆவாரம் பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து அதன் பிறகு அதனை வடிக்கட்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதால் உடலின் வெப்பத்தை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது.
செம்பருத்தி தேநீர்:
அடுத்ததாக செம்பருத்தி டீ, ஒற்றை செம்பருத்தி பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்து எடுத்துக்கொண்டு அதனை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டிய பிறகு எலுமிச்சை சாறு மற்றும் வெல்லம் சேர்த்து டீயை சுவைக்கலாம். இப்படி குடித்து வருவதால் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.
துளசி இலைகள் தேநீர்:
மூலிகை தேநீரான துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்து துளசி டீகளை குடிப்பதால் உடலில் உள்ள சளி பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
கொத்தமல்லி தேநீர்:
கொத்தமல்லி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் சுக்கு தூள் வெல்லம் கலந்து பருக வேண்டும். இந்த கொத்தமல்லி டீயை குடித்து வருவதால் வாய் புண்கள், சுவாசத்தில் புத்துணர்ச்சி மற்றும் மறதியைய் கட்டுப்படுத்தி நினைவாற்றலை தருகிறது.
முருகைக்கீரை தேநீர்:
முருகைக்கீரை இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை சேர்த்து வாரம் ஒரு முறை குடித்து வருவதால் உடலில் உள்ள எலும்புகளை வலிமைப்படுத்தி, கண் பார்வைகளையும் மேம்படுத்துகிறது.
புதினா தேநீர்:
புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதனை வடிக்கட்டி வெல்லம் சேர்த்து குடிக்கலாம். தினமும் குடித்து வருவதால் புத்தியை கூர்மை படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது.
கொய்யா இலை தேநீர்:
கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதில் ஏலக்காய் மற்றும் வெல்லம் சேர்த்து குடிப்பதால் சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்தி, வயிற்று வலி மற்றும் உடல் எடையை குறைப்பதற்கும் உதவியாக இருக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |