ஏன் தினமும் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்க வேண்டும் என்று தெரியுமா..?

hot water

ஏன் தினமும் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்க வேண்டும் என்று தெரியுமா..?

பொதுவாக நமக்கு உடல் நிலை சரியாக இல்லை என்றால் தான் வெந்நீர் (hot water) குடிப்போம். ஆனால் தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் வெந்நீர் குடித்தது வந்தால் எவ்வளவு நன்மை இருக்கின்றது என்று தெரியுமா? பொதுவாக வெந்நீர் குடிக்கும்போது நம் உடல் லேசாக வேர்க்கும். அவ்வாறு வேர்க்கும் போது நம் உடலில் இருக்கும் தேவையற்ற உப்புநீர் வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக பாதுகாகிறது.

வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

சரி வாருங்கள் தினமும் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதினால் கிடைக்கும் பயன்களை பற்றி இப்போது நாம் காண்போம்.

மலச்சிக்கல் சரியாக:

சிலர் மலச்சிக்கல் பிரச்சனையில் தினமும் அவதிப்படுவார்கள், இதற்கு என்ன காரணம் என்றால் அதிகமான கழிவுகள் நம் வயிற்றுள் தங்கிவிடுவது தான் முக்கிய காரணமாகும். நம் வயிற்றில் கழிவுகள் அப்படியே தங்கிவிடுவதினால் வயிற்று வலி, வயிற்று புப்புசம் என்ற பலவகையான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும், எனவே தினமும் நாம் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து வந்தால், நாம் சாப்பிடும் உணவானது மிக எளிதில் ஜீர்ணகித்து, அவற்றின் கழிவுகள் உடனே வெளியாகிவிடும். எனவே மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் வெந்நீர் (hot water) அருந்திவந்தால், மிக எளிதில் உணவுகள் ஜீர்ணகுது. மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.

இரவு நேரங்களில்:

சிலருக்கு இரவு நேரங்களில் புளித்த ஏப்பம், வாய்வு பிடிப்பு பிரச்சனைகள் இருக்கும் அப்போது வெந்நீர் குடித்தால் இந்த பிரச்சனை சரியாகும். மேலும் உடலும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.

முடி வளர்ச்சிக்கு:

தினமும் அதிகளவு வெந்நீர் (hot water) குடிப்பதினால் முடிவளர்ச்சியை தூண்டுகிறது மற்றும் முடி வேர்பகுதிகளுக்கு சுறுசுறுப்பு மற்றும் வலிமையளித்து, மேலும் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

இரத்த ஓட்டம் சீராக:

தினமும் அதிகளவு வெந்நீர் (hot water) குடிப்பதினால் இரத்த குழாய்கள் விரிவடையும், இதனால் இரத்த ஓட்டம் சீராக செயல்படுகிறது, மேலும் செல்களுக்கு ஊட்டச்சத்து, ஆக்சிஜன் ஆகியவை சரியாக கிடைக்கும். உடலும் ஆரோக்கியமாக செயல்படும்.

மேலும் தினமும் வெந்நீர் குடிப்பதினால் நரம்புமண்டலங்களின் செயல்பாடுகள் சீராக இருக்கும். குறிப்பாக நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால் நமக்கு வயதான தோற்றங்களும் ஏற்படாது.

உடல் எடையை குறைக்க:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் ஓருடம்ளர் வெந்நீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் மிக விரைவில் உடல் எடையை குறைத்துவிட முடியும்.

 உங்களுக்கு உடல் எடை வேகமாக அதிகரிக்க வேண்டுமா ?– SUPER TIPS

நெஞ்சு கரைசல் சரியாக:

சில நேரங்களில் நாம் அதிகளவு எண்ணெய் தின்பண்டங்களை அதிகளவு சாப்பிட்டு விடுவோம், அதன் காரணமாக நெஞ்சு கரைசல் ஏற்படும், அப்போது தாராளமாக இரண்டு டம்ளர் வெந்நீர் குடித்துவிட்டால் உடனடியாக நெஞ்சு கரைசல் சரியாகிவிடும்.

மேலும் பல நன்மைகள்:

தினமும் வெந்நீர் குடித்து வந்தால் நரம்பு சம்மந்தமான பிரச்சனைகள் சரியாகும், உயர் இரத்த அழுத்தம் குறையும், மன அழுத்தம் குறையும், சிறுநீரக சம்மந்தமான நோய்கள் எதுவும் ஏற்படாது, சுவாச மண்டலம், நுரையிறல், இதயம், மூளை ஆகியவை வலிமை பெரும்.

குளிர்காலங்களில் அதிகமாகும் சளி, இருமல், தும்மல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அப்போது நாம் அதிகளவு வெந்நீர் அருந்தி வந்தால் இந்த பிரச்சனைகள் சரியாகும்

இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அதிகளவு முகத்தில் பருக்கள் ஏற்படும். எனவே தினமும் வெந்நீர் குடித்து வந்தால் சருமத்தில் ஏற்படும் பருக்கள் சரியாகிவிடும்.

அதேபோல் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகம் வயிற்று வலி ஏற்படும் அப்போது அதிகளவு வெந்நீர் குடித்து வந்தால் வயிற்று வலி குணமாகிவிடும்.

அதேபோல் தினமும் சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் வெந்நீர் குடித்து வந்தால் உண்ணும் உணவானது சரியாக செரிமானமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE