கோபம் மற்றும் மன அழுத்தம் குறைய யோகாசனம்
நம் அன்றாட வாழ்க்கையில் பலவகையான பிரச்சனைகளை அதிகமாகவே சந்திக்கின்றோம், இதன் காரணமாக மன அழுத்தம், கோபம் போன்றவை அதிகமாகிவிடுகிறது, இவை ஆரோக்கியமான உடலுக்கு நல்லதல்ல எனவே மன அழுத்தம், கோபத்தைக் குறைப்பதற்கு உதவி செய்யும் யோகா பயிற்சிகளை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க..!
நம் உடலின் அனைத்து பாதிப்புகளுக்கும் யோகா தீர்வளிக்கிறது. அவற்றில் மன அழுத்தம் மற்றும் கோபத்தை குறைக்கும் யோகா என்னென்ன என்று இனி தெரிந்து கொள்வோம் வாங்க.
உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS |
மன அழுத்தம் குறைய வழிகள் | கோபம் குறைய என்ன செய்ய வேண்டும்:
1. கோபம் மற்றும் மன அழுத்தம் குறைய கருடாசனா:-
மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய யோகாசனம் கைகளையும், கால்களையும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு நிற்க வேண்டும்.
முன்னாள் இருக்கும் ஏதாவது ஒரு புள்ளியின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
இதன்மூலம் தோள்பட்டை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகள் மிகுந்த அழுத்தம் பெறும். அப்போது உணர்வுகளை தூண்டிவிடும் புள்ளிகள் சாந்தமடையும்.
2. மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய உத்தனாசனா:-
நேராக நின்று, உடலை முன்புறமாக கீழே வளைக்க வேண்டும். இருகைகளையும் மற்ற கை முட்டியை தொடுமாறு சேர்க்க வேண்டும். இது நரம்பியல் மண்டலத்தை சமநிலை செய்து, அமைதியை அளிக்கிறது. அதேசமயம் பின்புற வலி, கைகளில் வலி, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை பெற்று செய்ய வேண்டும்.
சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..! |
3. மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய பாலாசனா:-
தரையில் கால்களை உட்புறமாக மடக்கி அமர்ந்து கொள்ள வேண்டும். பின் தலையை தரையில் படுமாறு, கைகளை பின்புறம் நோக்கி தரையில் வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதே நிலையில் கைகளை மட்டும் முன்புறமாக கோர்த்துக் கொள்ள வேண்டும்.
4. மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய வஜ்ராசனா:-
கால்களை மடித்து உட்கார்ந்து, கைகளை நெஞ்சின் மீது குறுக்காக வைக்க வேண்டும். உணவு செரிமானத்திற்கு இது பெரிதும் உதவுகிறது. இரவு படுக்கைக்கு செல்லும் முன், தினசரி இந்த யோகாவை முயற்சிக்கலாம்.
5.கோபம் மற்றும் மன அழுத்தம் குறைய சுப்த பாத கோனாசனா:-
தரையில் படுத்துக் கொண்டு, இரு பாதங்களையும் ஒன்றோடு ஒன்று சேர்க்க வேண்டும். ஒரு கையை வயிற்றிலும், மறு கையை நெஞ்சிலும் வைக்க வேண்டும். இது மனநிலையை மிகவும் அமைதிப்படுத்துகிறது.
அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..? |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |