How to Increase Hemoglobin Level in Tamil
இன்றைய காலகட்டத்தில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் எடுத்து கொள்ளாமல் தவிர்ப்பதன் காரணமாக தான், நமது உடலின் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. ஹீமோகுளோபின் அளவு குறைவதால் நமது உடல் மிகவும் சோர்வடையும் மேலும் எந்த ஒரு வேலையையும் விரைவில் செய்து முடிக்க இயலாது. மேலும் அடிக்கடி உடல் நல குறைபாடு ஏற்படும். எனவே நமது உடலின் ஹீமோகுளோபின் அளவை சரியான அளவில் வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதனால் இன்றைய பதிவில் நமது உடலின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
How to Increase Hemoglobin Level Quickly in Tamil:
உடலின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக பார்க்கலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- முருங்கை இலை – 1 கைப்பிடி அளவு
- கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- மிளகு தூள் – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – 2 டம்ளர்
இதையும் படித்துப்பாருங்கள்=> ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணங்கள்
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி அதனுடன் 1 கைப்பிடி அளவு முருங்கை இலை, 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் 1 டீஸ்பூன் மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து 1 டம்ளர் வரும் வரை நன்கு கொதிக்க விடுங்கள்.
பின்னர் அதனை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் உடலின் ஹீமோகுளோபின் அளவு ஒரே வாரத்தில் அதிகரிப்பதை நீங்களே காணலாம்.
How to Increase Hemoglobin in a Week in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- உலர்ந்த அத்திப்பழம் – 100 கிராம்
- நெல்லிக்காய் – 2
- பட்டை – 1 துண்டு
- தேன் – 100 மி.லி
- இஞ்சி – 2 சிறிய துண்டு
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 100 கிராம் உலர்ந்த அத்திப்பழம், 2 நெல்லிக்காய் மற்றும் 2 சிறிய துண்டு இஞ்சி ஆகியவற்றை நன்கு பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஹீமோகுளோபின் குறைவு, இரத்த சோகை மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஆகிய மூன்று பிரச்சனைக்கும் இந்த ஒரு பதிவு போதும்
பின்னர் அதனை ஒரு மூடிபோட்ட கண்ணாடி பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் 1 பட்டை துண்டு மற்றும் 100 மி.லி தேன் சேர்த்து ஒரு 10 நாட்களுக்கு நன்கு ஊற விடுங்கள். பிறகு அதனை தினமும் மூன்று வேலை சாப்பிட்ட பிறகு 1 தேக்கரண்டி சாப்பிட்டு வாருங்கள்.
இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உங்களின் உடலின் ஹீமோகுளோபின் அளவு ஒரே வாரத்தில் அதிகரிப்பதை நீங்களே காணலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |