கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது தோலில் ஏற்படும் அறிகுறி எப்படி இருக்கும் தெரியுமா

Advertisement

Cholesterol Increase Symptoms in Tamil

நண்பர்களே வணக்கம் இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் நாம் அழகா இருக்க வேண்டும் என்பது தான். அழகு என்றால் முதலில் உடலை கட்டுகோப்பாகா வைக்கவேண்டும் என்பது தான். சிலருக்கு உடல் எடை இல்லை என்று கவலை இன்னும் சிலருக்கு உடல் எடை அதிகமாக உள்ளது என்று கவலை. உடல் எடை குறைவாக இருந்தாலும் நாளடைவில் அது சரியாக இருக்கும். ஆனால் உடல் எடை அதிகமாக இருந்தால் அதனை உடனே குறைக்கவேண்டும் என்று தினம் தோறும் பத்திய சாப்பாடு சாப்பிடுவார்கள்.

இதற்கு கொலஸ்ட்ரால் வருவதற்கு முன்னே அதனை கட்டுக்குள் வைத்திருந்தால் இப்போது எந்த பிரச்சனையும் இருக்காது. அது எப்படி முன்பே தெரியும். ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க முடியாது என்று யோசிப்பீர்கள் ஆனால் இனி அதனை பற்றி கவலை வேண்டாம். கொலஸ்டரால் ஏற்பட்டால் அதற்கு சிலவகையான அறிகுறிகள் உள்ளன அதனை பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்..!

கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் என்ன?

உங்களின் உடலை உங்களை தவிர யாரும் அவ்வளவு சரியாக கவனித்துகொள்ளமாட்டார்கள். நம் உடலை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல் உடலில் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலும் நம் உடலுடைய எதோ ஒரு மாற்றத்தை அடையும். அதோபோல் உடலில் ஆரஞ்சு, மஞ்சள் நிற அடையாளங்கள் கண்டால் அதனை அலட்சியமாக விடவேண்டாம். உடனே மருத்துவமனைக்கு சென்று உடலை பரிசோதித்து பார்த்துக்கொள்ளவேண்டும். இதுபோல் ஏதேனும் மாற்றுதல் ஏற்பட்டால் அது கொலஸ்ட்ரால் அதிகமாக கூடிய அறிகுறியாகும். இதுபோல் கால், கைகள் மற்றும் வேறுசில இடங்களில் தோன்றினால் அதற்கு காரணம் உங்களுடைய உடம்பில் தேவையில்லாத கெட்ட கொழுப்புகள் ஏற்படுகிறது.

சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பு குறைய இதை சாப்பிடுங்கள்..!

உடலுக்கு மட்டும் தான் இந்த மாறுதல் அறிகுறிகள் ஏற்பட வாய்ப்பு என்று நினைக்கவேண்டாம். இந்த அறிகுறிகள் உடலில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். முக்கியமாக கண்களுக்கு மேல் மஞ்சள் நிறத்தில் தடிப்பு தடிப்பாக இருக்கும். இப்படி இருந்தால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அறிகுறிதான். அதுபோல் கண்களில் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கும்.

கால் வலி காரணம்:

உடலில் கெட்ட கொழுப்புகள் ஏற்பட முக்கியமான அறிகுறியாக உள்ளது கால்களில் கூச்சம் ஏற்படும், அதேபோல் கால்கள் மற்றும் கைகளின் தோலில் ஏற்படும் வலிகள் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறியாகும்.

குறிப்பு ⇒ உங்களுடைய உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று உடலை பரிசோதிக்க வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement