வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக பாட்டி வைத்தியம்..!

Updated On: December 8, 2023 6:57 PM
Follow Us:
மாதவிடாய் பிரச்சனை
---Advertisement---
Advertisement

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக பாட்டி வைத்தியம்..!

Irregular Periods Reasons in Tamil:-

மாதவிடாய் பிரச்சனை – இன்றைய சூழ்நிலையில் பெண்கள் அனைவரும் சந்திக்கின்ற ஒரு பொதுவான பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய். அதுவும் இப்போது இருக்கின்ற காலகட்டத்தில் 100-யில் 80% பெண்கள் காலம் தவறிய மாதவிடாய் பிரச்சனையை அதிகம் சந்திக்கின்றனர்.

இந்த மாதவிடாய் பிரச்சனைக்கு பல காரணங்கள் உள்ளது. இருப்பினும் நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி ஏற்படுவது, ஹார்மோனின் சமமற்ற நிலை இவையெல்லாம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இந்த ஹார்மோன்களின் சமமற்ற நிலை தான் உடல் எடை அதிகரிப்புக்கு காரணம்.

கருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..!

இதுபோன்ற ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் அதிக சிக்கல் ஏற்படும். நம்முடைய உணவு முறை மாற்றம், லைஃப் ஸ்டைல் சேஞ்ச், மன அழுத்தம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

சரியான அளவில் புரதச் சத்து உணவுகள், இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவினை எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி மற்றும் யோகாவின் மூலமே இந்த ஹார்மோன் சமமற்ற நிலையினை சரி செய்து, காலம் தவறும் மாதவிடாய் பிரச்னையை சரிசெய்துவிடலாம்.

சரி இங்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாக (Irregular Periods Reasons in Tamil) பாட்டி வைத்தியம் என்ன உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

இது ஒன்னு போதும் உங்க ஹீமோகுளோபின் அதிகரிக்க..!

சீரகம்:

சீரகம் இந்த மாதவிடாய் பிரச்சனை சரி செய்ய சிறந்த மருந்தாக செயல்படுகிறது. அதாவது சீரகம் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய உதவும்.

குமட்டல் போன்ற மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க சீரகம் உதவுகிறது.

எனவே இந்த சீரகத்தை இரண்டு தேக்கரண்டி எடுத்து ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

பின் மறுநாள் காலையில் இந்த பாணத்தை பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் வடிகட்டி அப்படியே அருந்த வேண்டும்.

இந்த மாதவிடாய் பிரச்சனையில் இருந்து விடுபட ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

எள்ளுருண்டை:-

இந்த மாதவிடாய் பிரச்சனை சரியாக அல்லது மாதவிடாய் சரியாக வருவதற்கு எள்ளுருண்டை சாப்பிடலாம். அதிலும், கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது.

இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்றவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கவும், எலும்பை உறுதி செய்யவும் பயன்படும். மேலும், இது உடல் எடையையும் சரி செய்யும்.

மாதவிடாய் பிரச்சனை சரியாக:

சிலருக்கு பீரியட்ஸ் 3 அல்லது 4 நாட்கள் வரும். அப்போது அவர்களுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படும்.

அதிலும் சிலருக்கு கட்டிக்கட்டியாக இரத்த போக்கு ஏற்படும். அந்த சமயத்தில் வாழைப்பூவை வறுத்து தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்.

பொட்டுக்கடலையை நெய்யுடன் வறுத்து அதனுடன் உலர்திராட்சையை கலந்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதினால் அதிகப்படியான உதிரப்போக்கு போன்ற மாதவிடாய் பிரச்சனை சரிசெய்துவிட முடியும்.

அடுத்ததாக, சிலருக்கு மாதவிடாய் சரியாக வரும். ஆனால், சரியான பீரியட்ஸ் இருக்காது. இதனைத் தவிர்க்க மற்றும் மாதவிடாய் சரியாக வர இரும்புச் சத்து அதிகமான உணவைச் சாப்பிட வேண்டும்.

பேரீச்சை, உலர்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, கருவேப்பிலை ஜூஸ், அகத்திக்கீரை, சுண்டக்காய் ஆகியவற்றை உண்பதன் மூலம் இதனைச் சரி செய்யலாம்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

body heat reduce juice in tamil

வெயில் காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கிறதா.! அப்போ இந்த ஒரு ஜூஸ் மட்டும் குடிங்க..

verkuru home remedies in tamil

வேர்க்குரு எதனால் வருகிறது..அதற்கான சிறந்த பவுடர்

சுகர் இருக்கிறவங்க வெயில் காலத்தில் இந்த ஜூஸ் குடிங்க..!

இந்த கோடைகாலத்தில் வரும் வேர்க்குருவை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்..

benefits of drinking buttermilk in summer in tamil

ஏன் கோடை காலத்தில் தினமும் மோர் குடிக்க வேண்டும் தெரியுமா..? தெரியலைனா தெரிஞ்சுக்கோங்க..!

body heat reduce juice in tamil

கோடை காலத்தில் உடல் சூட்டை தணிப்பதற்கு எடுத்து கொள்ளும் ஜூஸ் வகைகள்..!

Pregnancy Hip Pain Relief in Tamil

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இடுப்பு வலியை போக்க சில வழிகள்..!

summer disease in tami

கோடை காலத்தில் எதிர்கொள்ளும் உடல் உபாதைகள் ..!

வாக்கிங் போகும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க..!