உடல் அரிப்பு நீங்க இயற்கை மருத்துவம் | Itching Treatment in Tamil
நமக்கு சரும அழகு எவ்வளவு முக்கியமோ அதை விட சரும ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உடலுக்கு ஒவ்வாத பொருட்களை சாப்பிடும் போது உடம்பில் அரிப்பு, தடிப்பு போன்றவை ஏற்படுகிறது. அரிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் இரத்தத்தில் தேவையில்லாத நச்சுக்கள் கலப்பது தான். இதற்கு நாம் சாப்பிடும் ஆங்கில மருந்து உடனடி தீர்வை கொடுத்தாலும், அவை நாளடைவில் சில பக்க விளைவுகளை தருகின்றன. நாம் இந்த பதிவில் தோல் அரிப்பை இயற்கை மருத்துவம் மூலம் எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
தோல் அரிப்பு இயற்கை மருத்துவம்:
- Itching Home Remedies in Tamil: தோல் அரிப்பு, சொறி சிரங்கு, படை போன்றவற்றை குணப்படுத்துவதற்கு குப்பை மேனி ஒரு சிறந்த மருந்து.
- ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் குப்பைமேனி பொடி, 1 டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி, 1 சிட்டிகை மிளகு தூள், அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
- பின் அதில் 10 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைக்கவும். 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு சூடு ஆறிய பிறகு இதனை வடிகட்டி அரிப்பு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் அரிப்பு உடனடியாக சரியாகிவிடும்.
- இதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தும் உடலில் உள்ள கிருமிகளை வெளியேற்றுவதற்கு உதவியாக இருக்கும். இந்த எண்ணெயை குளிப்பதற்கு முன் தடவி ஒரு 10 நிமிடம் காயவைத்து அதன் பின்னர் குளிப்பது நல்லது.
அருகம்புல்:
- தோல் அரிப்பு இயற்கை மருத்துவம்: தேவையான அளவு அருகம்புல் எடுத்து அதனை நன்றாக அரைத்து கொள்ளவும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
- இதை அரிப்பு உள்ள இடத்தில் தடவி அரை மணி நேரம் காய வைத்து பின்னர் குளிக்கவும். இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது நான்கு நாட்கள் உபயோகப்படுத்தலாம்.
குப்பைமேனி:
- Itching Home Remedies in Tamil: தோல் அரிப்பு நீங்குவதற்கு சிறிதளவு குப்பைமேனி இலையுடன் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு இவற்றை அரைத்து அரிப்பு உள்ள இடத்தில் தடவி குளித்து வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.
வேப்பிலை:
- தோல் அரிப்பு இயற்கை மருத்துவம்: வேப்பிலையை தேவையான அளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- பின் இதை அரிப்பு உள்ள இடத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து இதமான வெந்நீரில் குளித்து வந்தால் தோல் அரிப்பு நீங்கும்.
நன்னாரி வேர்:
- தோல் அரிப்பு மருத்துவம்: 20 கிராம் அளவு நன்னாரி வேர் எடுத்து அதனை அரை லிட்டர் நீரில் சேர்த்து 200 மில்லி ஆகும் வரை கொதிக்க வைக்கவும். பின் இதை காலையில் 100 மில்லி, மாலையில் 100 மில்லி அளவு குடித்து வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் நீங்கும்.
கற்றாழை:
- தோல் அரிப்பு இயற்கை மருத்துவம்: உடலில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை நீக்குவதற்கு கற்றாழை ஒரு சிறந்த மருந்து.
- கற்றாழையில் உள்ள ஜெல் பகுதியை அரிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் தோல் அரிப்பு உடனடியாக நீங்கும்.
தோல் நோய் நீங்க மருத்துவம் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |