கால் ஆணி பாட்டி வைத்தியம் | Kaal Aani Remedy
கால் ஆணி என்பது பொதுவாக கால்களில் ஏற்படும் அலர்ஜிகளின் காரணமாகவும், உடலில் ஏற்படக்கூடிய அதிக வெப்பம் காரணமாகவும் அசுத்தமான இடங்களில் கால்களில் காலணிகள் அணியாமல் போவதன் காரணமாக கால் ஆணி ஏற்படுகிறது. இந்த கால் ஆணி பிரச்சனை ஒருவருக்கு வந்து விட்டது என்றால் அவர்களினால் சரியாக நடக்க முடியாது. அப்படி நடந்தாலும் அதிகளவு வலிகளை ஏற்படுத்தும்.
சரி இந்த கால் ஆணி சரியாக இயற்கை வைத்தியம் மற்றும் பாட்டி வைத்தியம் என்னென்ன இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.
யாருக்கெல்லாம் கால்களில் ஆணி ஏற்படும்?
கால் பெருவிரலில் வீக்கம், வியர்வை சுரப்பி பாதிப்பு, காலில் வடுக்கள் மற்றும் மருக்கள் உள்ளவர்களுக்கு கால் ஆணி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, காலில் இரத்த ஓட்டம் குறைவதால், ஆணி ஏற்படும் வாய்ப்பு அதிகம். இப்படிப்பட்ட சூழலில், ஒரு மருத்துவரை சந்தித்து வைத்தியம் பார்ப்பது நல்லது.
கால் ஆணி அறிகுறிகள்:-
தடித்த கடினமான தோல், உப்பிய புடைப்புகள், அழுத்தும்போது வலி ஆகியவை கால் ஆணியின் அறிகுறிகளாகும். இவை நடக்கும் போது, நிற்கும் போது அதிக வலிகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்த பிரச்சனை உள்ளவர்கள் பாதிக்கபட்ட இடத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் இருந்தாலே பிரச்சனை விரைவில் சரியாகிவிடும். இந்த கால் ஆணி பிரச்சனைக்கு வீட்டிலேயே மிக எளிய முறையிலும் சிகிச்சை செய்து சரி செய்யலாம் அவற்றை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாமா?
கால் ஆணி பாட்டி வைத்தியம்..!
Kaal Aani Marunthu in Tamil:
கால் ஆணி சரி செய்ய வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து வீட்டிலேயே மிக எளிதாக என்ன செய்யலாம்?
தேவையான பொருட்கள்:
- கற்பூரம் – 5 (பொடி செய்தது)
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- மருதாணி இலை – ஒரு கைப்பிடியளவு (மை போல் அரைத்து கொள்ளவும்)
- கற்றாழை ஜெல் – ஒரு ஸ்பூன்
- வசம்பு பொடி – ஒரு ஸ்பூன்
Kaal Aani Remedy – செய்முறை:
மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு சுத்தமான பவுலில் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து நன்றாக அப்ளை செய்து நன்றாக ஒரு துணியை வைத்து கட்ட வேண்டும். இவ்வாறு செய்வதினால் ஒரே நாளில் கால்களில் உள்ள சலங்கள் மற்றும் இரத்தம் அனைத்தும் வெளியேறிவிடும். பிறகு மறுநாள் காலில் கட்டிய துணியை அவிழ்த்து எடுக்கும் போது கால் ஆணி வேரோடு வெளியே வந்து விடும். பின் திரும்பவும் தயாரித்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து துணியால் கட்டிவிடவும். இவ்வாறு இரண்டே முறை வைத்தியத்தை செய்தாலே போதும் கால் ஆணி சரி ஆகிவிடும்.
கால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை !!! முழு விளக்கம் !!! |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |