வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

காரம் அதிகம் சாப்பிட்டால் உடலில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா.?

Updated On: November 14, 2023 12:18 PM
Follow Us:
karam theemaigal in tamil
---Advertisement---
Advertisement

காரம் அதிகம் சாப்பிட்டால்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் காரம் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். சிலர் வீட்டியில் காரம்  அதிகமாக உணவில் சேர்த்து சமைப்பார்கள். அவர்களுக்கு அதிகமாக காரம் சாப்பிட்டால் தான் உணவே சாப்பிட்டது போல இருக்கும். இது போல அதிகமாக காரம் சாப்பிடுபவர்களுக்கு, அதை உடனடியாக நிறுத்தவும் முடியாது. இப்படி அதிகமாக காரம்சாப்பிடுவதால் உடலில் அதிகமாக சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. மேலும் அவை என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

தூக்கி எறியும் மாதுளை தோலில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா.!

காரம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்:

பொதுவாகவே காரம் சேர்ந்த உணவுகளை எப்போதாவது  சாப்பிடுவது நல்லது. அதை தொடர்ந்து சாப்பிடுவதால் தான் உடலில் பல விதமான பிரச்சனைகளை சந்திப்பதாக இருக்கும். இந்த பாதிப்பானது தொண்டையில்  இருந்து தொடங்கி மலத்துவாரம் வரை பிரச்சனைகளை உருவாகின்றது.  கார உணவுகளை எடுப்பதில் நல்ல விஷங்களும் இருக்குறது அதே சமயம் அதில் அதிக பாதிப்புகளும் இருக்கிறது.

அதிகமாக கார உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது கண்ணில் இருந்து தண்ணீர் வருவது, மூக்கி இருந்து தண்ணீர் வருவது  காதுகள் சிவந்து போவது போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கும்.

அதிகமாக காரவகைகளை எடுத்து கொள்ளும் பொழுது மூலம் நோய் வருவதற்கும் காரணமாக இருக்கிறது. இந்த மூலம் நோயானது ஆசனவாயிலும் கீழ் மலக்குடல் அல்லது அதன் வெளியில் உள்ள நிரம்புகள் வீக்கம் அடையும் பொழுது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இந்த பிரச்சனையானது நாளடைவில் மலச்சிக்கல், வயிற்று போக்கு, கழிவறையில் அதிக நேரம் செலவிடுவதால் ஏற்படும் வலி, செரிமான கோளாறு, போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதால் மூலம் நோய்க்கான அறிகுறிகள் என்றும் சொல்லப்படுகிறது.

மூலம் நோய்க்கு முக்கிய காரணம் நாம் சாப்பிட கூடிய உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட கூடிய மாற்றம் தான், காரமான உணவுகள் மூல நோயை உண்டாக்கவில்லை என்றாலும் மூல நோயை உருவாக்க கூடிய காரணமாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

காரம் அதிகம் சாப்பிட்ட பிறகு அதிகமாக தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம், அப்படி தண்ணீர் அதிகமாக எடுத்துக்கொள்ள வில்லை என்றால் ஆசனவாயில் எரிச்சல்கள், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

அதிகமாக காரத்தை எடுத்து கொள்ளும் பொழுது நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகி, கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றில் புண்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது.

இதை விட கார உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு அதிகமாக கோவம் வரும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் கர்ப்பிணி பெண்களுக்கும் கார உணவுகளை கொஞ்சம் தவிர்ப்பது நல்லது. எனவே கார உணவு வகைகளை கொஞ்சமாக எடுத்துக்கொள்வது நல்லது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement

Abirami Baskar

Hello, I m Abirami working as Junior Content Writer in Pothunalam.com, I would like to write a topics based on the following categories such as Health Tips, Beauty Tips, Recipes, Home Improvements & Banking Tips.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now