சாவை தவிர்த்து அனைத்து பிரச்சனைக்கும் தீர்வாக இருக்கும் அற்புத மருந்து இது தான்..!

Advertisement

கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் கலவையின் பயன்கள் | Karunjeeragam Vendhayam Omam Benefits in Tamil

இன்றைய சூழலில் யாருக்கு என்ன பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்காத அளவிறல் பிரச்சனைகள் வருகிறது. அதிலும் யாருக்கு என்ன நோய் வரும் என்றும் சொல்லமுடிவதில்லை. நேற்று நன்றாக பேசிக்கொண்டிருப்பவர் திடீர் என்று இன்று  மரணமடைகின்றன. இதையெல்லாம் பார்க்கும் பொழுது மனதிற்கு திக்கென்று தான்  இருக்கிறது. இருக்கும் வரை ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு யாருக்கும் எந்த வகையிலும் இடையூறு செய்யாமல் போய்விட வேண்டும். அப்படி நாம் இருக்கும் வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சரியான நேரத்திற்கு உணவருந்த வேண்டும், சரியான நேரத்திற்கு உறங்க வேண்டும், குறிப்பாக நம்மை மகிழ்ச்சிக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த விஷயத்திற்கெல்லாம் இப்பொழுது குழந்தைகளை தவிர வேறு யாரும் அந்த குடுப்பணை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அனைவருக்குமே ஏதாவது ஒரு வகையில் மனக்கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்கிறது. சரி விடுங்கள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு ஒரு அற்புத மருந்து இருக்கிறது. அது என்ன மருந்து என்று இப்பொழுது பார்த்துவிடுவோம்.

கருஞ்சீரகம் – Karunjeeragam:

அற்புத மருந்து என்று சொன்னது இந்த கருஞ்சீரகத்தை தான். கருஞ்சீரகத்தை நாம் தினமும் நம் உடலுக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்வதன் மூலம் பல வகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சரி செய்கிறது.

குறிப்பாக இந்த கருஞ்சீரகம் சர்க்கரை நோயை குணப்படுத்துகிறதாம். அதாவது நமது உடலில் உள்ள கணையத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து கணையத்தில் இன்சுலினை சுரக்க செய்து உடலில் சர்க்கரை நோயில் இல்லாமல் குணப்படுத்துகிறதாம்.

மேலும் கருஜீரகத்தை தினமும் PCOD பிரச்சனை உள்ள பெண்கள் எடுத்துக்கொள்வதினால் கருமுட்டை நீர்க்கட்டி பிரச்சனை சீக்கிரம் குண்மாகிவிடுமாம்.

மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் இந்த கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் மாதவிடாய் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். ஆனால் உதிரப்போக்கு பிரச்சனை உள்ள பெண்கள் மட்டும் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கருஞ்சீரகத்தை தொடர்ந்து ஒரு மனிதன் எடுத்துக்கொள்வதன் மூலம் அவர்களின் ஆயுசுக்கும் இதயம் சார்ந்த எந்த ஒரு பிரச்சனையும் வராது.

குறிப்பாக தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். இதன் மூலம் உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறுகிய நாட்களிலேயே வெளியேற்றிவிடுகிறது. இதன் மூலம் தொப்பையை மிக எளிதாக குறைத்துவிடலாம்.

கருஞ்சீரகம் எப்படி சாப்பிடுவது:

  • 100 கிராம் கருஞ்சீரகம்
  • 100 கிராம் வெந்தயம்
  • 50 கிராம் ஓமம்

இந்த மூன்று பொருட்களையும் தனித்தனியாக வறுத்து பிறகு ஒன்றாக பவுடர் போல் அரைத்து ஒரு காற்றுப்புகாத பாக்சில் வைத்துக்கொள்ளுங்கள்.

இரவு உறங்க செல்வதற்கு முன் 1 கிராம் அல்லது 2 கிராம் அரைத்த பவுடருடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிடலாம். அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 கிராம் அல்லது 2 கிராம் அரைத்த சேர்த்து தேவையான அளவு தேன் கலந்து அருந்தலாம். இவற்றில் எப்படி சாப்பிட்டாலும் உங்களுக்கு முழுமையான பலன் கிடைக்கும்.

உங்களுக்கு தொப்பை முழுமையாக குறைந்துவிட்டது என்றால் அதன் பிறகு இந்த பானத்தை அருந்தவேண்டிய அவசியம் இல்லை அதன் பிறகு நிறுத்திக்கொள்ளலாம்.

கருஞ்சீரகத்தை பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொண்டீர்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் ஒரு லைக் மற்றும் ஷேர் பண்ணுங்கள் நன்றி வணக்கம்..

மேலும் கருஞ்சீரகம் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கருஞ்சீரகம் பயன்கள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement