லெமன் டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் | Lemon Tea Benefits in Tamil

Lemon Tea Benefits in Tamil

லெமன் டீ பயன்கள் | Benefits of Lemon Tea in Tamil

நம் உடம்பை சுறுசுறுப்பாக வைத்து கொள்வதற்காகவும், உடலுக்கு ஆற்றல் கிடைப்பதற்கும் உதவும் பானங்கள் தான் இந்த க்ரீன் டீ, பிளாக் டீ, லெமன் டீ, இஞ்சி டீ போன்றவைகள். இந்த பானங்களை நாம் தினசரி எடுத்து கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. நாம் இந்த பதிவில் லெமன் டீ குடிப்பதால் உடலுக்கு என்ன விதமான நன்மைகள் கிடைக்கின்றன என்பதை படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

செரிமான பிரச்சனைகளை சரி செய்ய – Lemon Tea Benefits in Tamil:

lemon tea benefits in tamil

 • லெமன் டீயில் இருக்கும் சிட்ரிக் ஆசிட் கல்லீரல் மற்றும் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை நீக்க உதவுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
 • செரிமானம் சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்வதில் லெமன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து குடலின் செயல் திறனை அதிகரிக்க உதவுகிறது. பிரியாணி போன்ற உணவுகளை சாப்பிட்டவுடன் சிலருக்கு ஏற்படும் வயிற்று வலியை சரி செய்ய உதவுகிறது.

சரும பிரச்சனைகளை சரி செய்ய – லெமன் டீ பயன்கள்:

benefits of lemon tea in tamil

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

 • லெமனில் இருக்கும் Astringent முகத்தில் இருக்கும் இறந்த செல்களை புதுப்பிக்க பயன்படுகிறது. முகப்பரு, வடுக்கள் போன்றவற்றை நீக்கி சருமத்தை இளமையாக வைத்து கொள்ளவும், பொலிவாக வைத்து கொள்ளவும் உதவுகிறது.

இதயத்தை பாதுகாக்க – Lemon Tea Benefits in Tamil:

green tea with lemon benefits in tamil

 • Flavonoid-கள் லெமன் டீயில் இருப்பதால் உடலில் தேவையில்லாமல் சேரும் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது, இதய நோய்களை சரிசெய்யவும் பயன்பட்டு வருகிறது.

புற்றுநோய்களை சரி செய்ய – லெமன் டீ பயன்கள்:

லெமன் டீ பயன்கள்

புற்றுநோய்களை சரி செய்வதற்கு லெமன் டீ உதவுகிறது. லெமன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், Flavonoid-கள் புற்றுநோய் செல் வளர்ச்சியை தடுப்பதற்கு உதவுகிறது, மேலும் மார்பக புற்றுநோய், இறப்பை புற்றுநோய், பெருங்குடல், சிறுகுடல் புற்றுநோய்களை சரி செய்ய உதவி வருகிறது.

தொண்டை வலியை குணப்படுத்த – Benefits of Lemon Tea in Tamil:

லெமன் டீ பயன்கள்

 • இருமல், தொண்டை வலி, சளி பிரச்சனைகள், தொண்டை எரிச்சல் உள்ளவர்கள் லெமன் டீயில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும்.
 • மன அழுத்தம், தலைவலி உள்ளவர்களுக்கு லெமன் டீ ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. உடல் சோர்வை குறைப்பதற்கும், தூக்க உணர்வை குறைப்பதற்கும் லெமன் டீ மிகவும் நல்லது, மேலும் இது உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கிறது.

சர்க்கரை நோயை குணப்படுத்த – Lemon Tea Benefits in Tamil:

lemon tea benefits in tamil

 • நீரிழிவு நோயை குணப்படுத்த உதவுகிறது. உடம்பில் இன்சுலின் அளவை குறையாமல் பார்த்து கொள்ள உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பானமாக லெமன் டீ உள்ளது.

உடல் எடையை குறைக்க – Benefits of Lemon Tea in Tamil – Lemon Tea For Weight Loss in Tamil 

lemon tea benefits in tamil

 • உடல் பருமனாக உள்ளவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு லெமன் டீ உதவி வருகிறது. லெமன் டீ உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை சீரான நிலையில் வைத்து கொள்ள உதவுகிறது.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஈறுகளின் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து எப்பொழுதும் நம்மை ஆரோக்கியத்துடனும், இளமையாகவும் வைத்து கொள்ள உதவுகிறது.

லெமன் டீ செய்முறை

தேவையான பொருட்கள்:

 1. தண்ணீர் – தேவையான அளவு
 2. டீத்தூள் – அரை டேபிள் ஸ்பூன்
 3. ஏலக்காய் தூள் – ஒரு பின்ச்
 4. இஞ்சி – 1 (நறுக்கியது)
 5. சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
 6. எலுமிச்சை பழச்சாறு – பாதியளவு

லெமன் டீ செய்முறை:

lemon tea benefits in tamil

 • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பின் அதில் அரை டேபிள் ஸ்பூன் டீத்தூள், ஒரு பின்ச் அளவு ஏலக்காய் தூள், நறுக்கிய இஞ்சி துண்டு சேர்த்து கொதிக்க விடவும்.
 • பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை (சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து கொள்ளலாம்) சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். 2 நிமிடம் கழித்து கொதிக்க வைத்த டீயை வடிக்கட்டி கொள்ளவும், பின் அதில் பாதி எலுமிச்சை பழச்சாறை பிழிந்து கொள்ளவும். இப்போது ஆரோக்கியமான சுவையான லெமன் டீ தயார்.
எடையை குறைக்க உதவும் லெமன் காபி

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips in tamil