நுரையீரல் பலமாக இருக்க இந்த உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ளவும்

lungs healthy food in tamil

நுரையீரல் பலம் பெற

மனிதனாக பிறந்த அனைவருமே ஆரோக்கியமாக இருப்பதற்கு சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியமானது. இன்றைய உலகில் பணத்தை சம்பாதிப்பதற்கு ஓடுகிறார்கள். இதனால் நேரத்திற்கு சாப்பிடாமலும், சத்தான உணவுகளை சாப்பிடாமலும் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கிறார்கள். நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புமே ரொம்ப முக்கியம் அதில் ஒன்று தான் நுரையீரல்.

 இதன் முக்கிய வேலையென்றால் நாம் சுவாசிக்கின்ற காற்றை சுத்திகரித்து அதில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நமது உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய ஆக்சிஜனை உள் எடுத்துக்கொள்வது தான். இந்த நுரையீரல் தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றால் நாம் நோய்வாய்ப்பட்டு இறந்து போய்விடுவோம். அதனால் நுரையீரலை பலமாக வைத்து கொள்ள இந்த பதிவில் கூறியுள்ள உணவுகளை கட்டாயமா சாப்பிட வேண்டும். வாங்க அது என்னென்ன உணவுகள் என்று தெரிந்து கொள்வோம்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக ஆடாதோடை!!!

மஞ்சள்:

நுரையீரல் பலம் பெற

மஞ்சளில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் நுரையீரலில் உள்ள பாக்ட்ரியாவை எதிர்த்து போராடுகிறது. நுரையீரல் ஏற்படும் வீக்கம், ஆஸ்துமா, சளி போன்றவற்றிற்கு சிறந்த உணவாக இருக்கிறது.

ஆப்பிள்:

நுரையீரல் பலம் பெற

ஆப்பிளில்  ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. அதனால் வாரத்தில் 5 ஆப்பிள் சாப்பிடுவது நுரையீரல் செயல்பாட்டை சீராக வைத்து கொள்ள உதுவுகிறது.

மிளகு தூள்:

நுரையீரல் பலம் பெற

மிளகில் வைட்டமின் சி இருப்பதால் ஆக்ஸிஜனேற்றியாக பயன்படுகிறது. நுரையீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும், வீக்கத்தை குறைக்கிறது. தினமும் சாப்பிடும் உணவில் மிளகை சேர்த்து கொள்ளவும்.

கீரைகள்: 

நுரையீரல் பலம் பெற

கீரைகளில் பல வகையான ஆக்ஸிஜனேற்றங்கள் இருக்கிறது. நுரையீரலில் ஏற்படும் வீக்கம் ஏற்படாமல் எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்திலுருந்து பாதுகாக்கிறது.  சாப்பிடும் உணவுகளில் கீரையை சேர்த்து கொள்ள வேண்டும்.

நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க இந்த காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்..!

தக்காளி:

நுரையீரல் பலம் பெற

தக்காளி சார்ந்த உணவுகளை சாப்பிடுவது ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு வீக்கத்தை குறைப்பதாகவும், சிஓபிடி பிரச்சனை உள்ளவர்களுக்கு நுரையீரல் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.

அவுரிநெல்லிகள்:

நுரையீரல் பலம் பெற

அவுரிநெல்லியில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை நுரையீரல் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.

சிவப்பு முட்டைகோஸ்:

நுரையீரல் பலம் பெற

சிவப்பு முட்டைகோஸில் நார்சத்து நிறைந்துள்ளது. குறைந்த அளவு நார்சத்து உணவு சாப்பிடுபவர்களை விட, அதிகமான நார்சத்து உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வுகள் கூறப்படுகிறது. அதனால் நார்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

பருப்பு வகைகள்:

நுரையீரல் பலம் பெற

பருப்பில் மெக்னீசியம், இரும்பு, தாமிரம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை சாப்பிடுவதனால் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். நார்சத்து நிறைந்த பருப்பு வகைகளை சாப்பிடும் போது நுரையீரல் புற்றுநோய், சிஓபிடி போன்ற அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.

நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருக்க இந்த 5 விஷயத்தை கடைபிடிக்கவும்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil