மாதவிடாய் குறைவாக வந்தால் இந்த பிரச்சனையாக தான் இருக்கும்.!

Advertisement

மாதவிடாய் குறைவாக வர காரணம் | Low Bleeding During Periods in Tamil

அனைத்து பொதுநலம்.காம் வாசகர்களுக்கும் வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சைகளை பற்றியும் குறைவாக வருவதற்கான காரணங்களையும் பார்க்கப்போகிறோம். பெண்களுக்கு முக்கியமாக இந்த பிரச்சனை மதம் மாதம் நிச்சியமாக வந்து விடுகிறது. அது சீராக வரவில்லை என்றாலும் பிரச்சனைதான் வரும். ஒவ்வொரு முறையும் மருத்துவரை அணுகி அதற்கான காரணங்களையும் கேட்டுக்கொண்டு வருவோம்.

மாதவிடாய் அதிகமாக வந்தாலும் பெண்கள் அதிகமாக கஷ்டம் அனுபவிப்பார்கள். அதே போல் சரியாக வரவில்லையேற்றாலும் பின் விளைவுகள் ஏற்படுத்தும். மாதவிடாய் ஏன் அப்படி வருகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

மாதவிடாய் கட்டியாக வர காரணம்..!

மாதவிடாய் இரத்தம் குறைவாக வந்தால்:

மாதவிடாய் இரத்தம் குறைவாக வந்தால்

பொதுவாக மாதவிடாய் இரத்தம் குறைவாக வருவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. ஹைப்பர் தைராய்டிசம், மெனோபாஸ், பெரிமெனோபாஸ் போன்றவை காரணமாக இருக்கலாம். உடல் எடை குறைவாக இருப்பது, குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக்கொள்வது போன்றவற்றினாலும் மாதவிடாய் குறைவாக வரும். மேலும்.  பிசிஓஎஸ் எனப்படும் ஹார்மோன் கோளாறுகள் இருந்தாலும் மாதவிடாய் குறைவாக இருக்கும். இவை பொதுவான காரணங்களாக இருந்தாலும், மேலும் சில காரணங்களும் இருக்கிறது. அதனை பற்றி பின்வருமாறு விவரமாக பார்க்கலாம் வாங்க.

மாதவிடாய் குறைவாக வர காரணம்

  • மாதவிடாய் மாதத்திற்கு மாதம் சரியாக வந்துவிடும். அதில் ஒரு சிலருக்கு அதிக இரத்த போக்கு வரும் அதும் சரியான நிலை அல்ல. அது போல் மாதவிடாய் சரியாக வராமல் இருக்கும் அதுவும் சீரான நிலையல்ல. அதனால் இந்த மாதிரியான பிரச்சனை உள்ளவர்களுக்கு என்ன குறைபாடுகள் இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

எடை இழப்பு:

எடை இழப்பு

  • உடல் நன்றாக இருக்கும். நல்ல திடமாக இருக்கும். அவர்கள் திடீர் என்று எடை இழந்து இருப்பீர்கள். அதற்கு காரணம் உடலில் உள்ள ஹார்மோன்கள்  ஒழுங்கப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அண்ட விடுப்பின் போது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது இதனால் மாத மாதவிடாய் சரியாக வர காரணம்.

மருந்து ஒவ்வாமை:

மருந்து ஒவ்வாமை

  • சிறிது தலைவலி என்ற உடன் மாத்திரை வாங்கி கட்டுப்பாட்டை மீறி மாத்திரைகளை சாப்பிட்டால். உடல் உள்ள கருப்பையில் முட்டை வெளிவரும். இந்த மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் அது வெளிவருவது தடுத்து. கருப்பையில் கட்டி உருவாகவும், மாதவிடாயின் போது சீராக வராமல் பிரச்சனை வரும்.

மன அழுத்தம்:

மன அழுத்தம்

  • மனிதர்கள் என்றால் முதலில் மனதிற்கு அமைதி கிடைக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அதனால் அந்த நொடியில் யோசித்துவிட்டு அதனை தவிர்க்க நிதானமாக இருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் தலையில் வைத்துக்கொண்டு எப்போதும் ஒரே விஷயத்தை நினைத்துக்கொண்டு இருந்தால் அப்படி யோசித்தீர்கள் என்றால் நாளடைவில் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் உடலில் ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்தி மாதவிடாயின் போது ஒழுங்கற்ற இரத்த போக்கு ஏற்படுத்தும்.
மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்வது?

ஹைப்பர் தைராய்டிசம்:

ஹைப்பர் தைராய்டிசம்

  • நம் உடலை நன்றாக பார்த்துக்கொண்டால் மட்டும் தான் எந்த நோயும் நம்மை நெருங்காது. அவ்வாறு இல்லையென்றால் சில நோய்கள் நம்மிடம் ஏற்பட்டால் உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அந்த வகையில் பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் அல்லது ஹைப்பர் தைராய்டிசம் போன்ற நோய்கள் ஏற்பட்டால் மாதவிடாயின் போது சரியான நிலை ஏற்படாது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement