மாதவிடாய் கட்டியாக வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?
Mathavidai Problem Solution Tamil:- வணக்கம் தோழிகளே.. பொதுவாக மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கினை வகுக்கிறது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் கருப்பை மடிப்பிலிருந்து இரத்த போக்கானது மாதம் மாதம் சுழற்சி முறையில் வெளியேறுகிறது. இருப்பினும் இந்த மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு உதிரப்போக்கானது கட்டி கட்டியாக வெளியேறும் இத்தகைய பிரச்சனை பல காரணங்களினால் ஏற்படும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. சரி இந்த பதிவில் மாதவிடாய் கட்டியாக வர என்ன காரணம் என்பதை பற்றி படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
மாதவிடாய் கட்டியாக வர காரணம் – Mathavidai Problem Solution Tamil:-
பொதுவாக சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கானது மிகவும் கட்டி கட்டியாக வருவதுண்டு. இதற்கு என்ன காரணம் என்றால் உடலில் இருந்து வெளியேறும் உதிரபோக்கு அதாவது கருப்பை அளவு சிந்தும் போது மாதவிடாய் இரத்தக்கட்டிகள் உருவாகின்றன.
இதனை ஹார்மோன் சமநிலையின்மை என்று சொல்லலாம், அதாவது மாதவிடாய் சுழற்சிக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதன் சமநிலையின்மையால் கருப்பையின் உள்ளடுக்குகள் தடினமாகி அதிக இரத்த போக்கு ஏற்படும். இதனாலும் இரத்தம் கட்டி கட்டியாக வெளியேறும். தீடீர் மாற்றம், எடை பருமன், மருந்து பக்க விளைவுகள், கருப்பை விரிவாக்கம், கருப்பையில் இரத்த அடைப்பு, கருப்பை திசுக்களின் அசாதாரண வளர்ச்சி, முறையற்ற மாதவிடாய் போன்றவை ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது.
மாதவிடாயின் போது இரத்தம் உறைதல் தீங்கு விளைவிக்காத நிலையில் தொடர்ந்து 7 நாட்களுக்கு மேல் இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுகுவது அவசியமானது. இத்தகைய பிரச்சனையை தவிர்க்க இயற்கை வைத்தியம் என்னென்ன இருக்கிறது என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
மாதவிடாய் ஒரே நாளில் வருவதற்கு என்ன செய்வது?
ராஸ்பெர்ரி டீ:
Mathavidai Problem Solution Tamil – ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் சிவப்பு ராஸ்பெர்ரி டீ சேர்க்கவும். பின் நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்த பின் வடிகட்டி நன்கு ஆறவிடவும். பிறகு இனிப்பு தேவையெனில் தேன் சேர்த்து குடிக்கவும். இப்படி குடிப்பதன் மூலம் மாதவிடாய் கட்டியாக வருவது சரியாகும்.
ஐஸ் பேக்:
இதுமாதிரி பிரச்சனை ஏற்படும் போது ஐஸ் பேக் கொண்டு குளிர்ந்த ஒத்தடம் செய்வது நல்லது. அடிவயிற்றில் குளிர்ந்த பேக் கொண்டு 2 நிமிடங்கள் வரை விட்டு விட்டு அகற்றவும். ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் பிறகு மூன்று முறை இதை செய்யவும். அடிக்கடி செய்யலாம்.
வெதுவெதுப்பான நீர்:
வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் கலந்து தேன் சேர்த்து குடிக்கலாம். தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. பல்வேறு இரத்தப்போக்கு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
பூசணி விதை:
பூசணி விதைகளில் பைட்டோஸ்டெரால்கள் மற்றும் ஒமேகா 3 பாலி அன்சாச்சுரேட்டர் கொழுப்பு அமிலங்கள் (புரோஸ்டாக்லாண்டின்களாக மாற்றப்படுகின்றன) இது மாதவிடாய் காலத்தில் இரத்தக்கட்டிகளை எளிதாக்க உதவும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |