வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மத்தி மீன் பயன்கள் | Mathi Fish Benefits in Tamil

Updated On: October 18, 2024 12:00 PM
Follow Us:
Mathi Meen Benefits in Tamil
---Advertisement---
Advertisement

மத்தி மீன் நன்மைகள் | Sardine Fish Benefits in Tamil | Mathi Meen Benefits

Mathi Meen Benefits in Tamil: தமிழ்நாட்டில் அதிகமாக கிடைக்கக்கூடிய மீன் வகைகளில் ஒன்றுதான் இந்த மத்தி மீன். மத்தி மீனில் உடலுக்கு தேவையான புரதச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. மத்தி மீனானது விலையிலும் குறைவு, உடலிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கக்கூடிய மீன் வகையை சேர்ந்தது மத்தி. உணவில் மத்தி மீனை சேர்த்துக்கொண்டால் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். சரி மத்தி மீன் (mathi meen) சாப்பிடுவதால் என்னென்ன நோய்களை குணப்படுத்தலாம் என்று விரிவாக படித்து தெரிந்துகொள்ளலாம்.

சால்மன் மீன் நன்மைகள்

மத்தி மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்| Mathi Meen Benefits in Tamil:

Mathi Meen Benefits in Tamil

  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க: நோய் எதிர்ப்பு சக்தி என்பது உடலுக்கு மிக முக்கியமான ஒன்று. வாரத்தில் இரண்டு முறை மத்தி மீனை உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காணப்படும்.
  • சர்க்கரை அளவை குறைக்க: நீரிழிவு நோய் இருப்பவர்கள் வாரத்தில் இருமுறையாவது மத்தி மீனை உணவுடன் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவானதை குறைக்கும்.
  • எலும்பு பகுதிகள் வளர்ச்சியடைய: மத்தி மீனில் அதிகளவு கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ள மத்தி மீனை சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்பு பகுதிகள் நன்கு வளர்ச்சி அடைந்து காணப்படும்.
  • இதய சம்பந்த பாதிப்புகளை தடுக்கும்: மத்தி மீனில் இருக்கக்கூடிய வைட்டமின் பி 12 சத்து உடலில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் அளவினை சரியாக வைத்து இதய பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்துவிடும்.
  • முன் கழுத்து கழலை நோயை குணப்படுத்தும் மத்தி: மத்தி மீனில் அயோடின் கலந்த தாது சத்துக்கள் அதிகளவு உள்ளன. அதனால் மத்தி மீனை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர முன் கழுத்து கழலை என்று சொல்லக்கூடிய நோயை வராமல் தடுத்து நிறுத்தலாம்.
மீன் வகைகள் மற்றும் மீன் தமிழ் பெயர்கள்
  • சருமம் பளபளப்பாக இருக்க: கால்ஷியம் மாத்திரைகளானது மத்தி மீன்களில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. மத்தி மீனால் தயாரிக்கப்பட்டுள்ள கால்சியம் மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால் சருமம் புத்துணர்ச்சியாக காணப்படும்.
  • பார்வைத்திறன் அதிகரிக்க: பார்வைத்திறன் குறைவாக உள்ளவர்கள் மத்தி மீனை உணவில் சேர்த்துக்கொண்டால் கண்களில் பார்வைத்திறன் அதிகரித்து காணப்படும்.
  • உடல் எடையை குறைக்க: அதிக உடல் எடை உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை மத்தி மீனை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக காட்சியளிப்பீர்கள்.
  • தோல் சம்பந்த நோய்/ முடி உதிர்வை தடுக்க: உடலில் தோல்  சம்பந்தமான நோய்கள், தலையில் முடி உதிர்வு பிரச்சனையிலிருந்து முற்றிலும் விடுபட மத்தி மீனை சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 

Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now