தூக்கி எறியும் மாதுளை தோலில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா.!

mathulai thol benefits in tamil

 மாதுளை தோல் நன்மைகள் |Mathulai thol benefits in tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் நாம்  மாதுளை பழத்தோலின் நன்மைகளை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாகவே நாம் மாதுளை பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருப்போம், அதே போல் மாதுளை பழத்தை  ஜூஸ் ஆகவும் குடித்திருப்போம். மாதுளை பழத்தை  சாப்பிடுவதாலே இவ்வளவு நன்மைகள் நிறைந்திருக்கிறது, ஆனால் நாம் தூக்கி  எறியப்படும் மாதுளை தோலில் இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது என்று பலருக்கும் தெரியாது. அப்படி என்ன மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் என்று யோசிக்கிறீர்களா?  அப்படி என்ன மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது என்று நம் பொதுநலம். காம் பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

முள்ளங்கி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

 மாதுளை தோலின் பயன்கள்:

  •  மாதுளை பழங்களை தினமும் சாப்பிடுவதால் இரத்தத்தை சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்க்கிறது.
  • ஆனால்  மாதுளையை விட மாதுளை பழ  தோலில் அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாகவே உள்ளது.
  • மாதுளை தோலில் அதிகமாக சத்துக்கள் நிறைந்து இருந்தாலும் அதை சாப்பிடுவதை அதிகம் யாரும் விரும்புவதில்லை.
  • ஆனால் மாதுளை தோல்கள் அதிகமாக ஆயுர்வேத மருந்துகளுக்கும், அழகை மேம்படுத்துவதற்கும் இந்த மாதுளை தோல்கள் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

மாதுளை தோலின் மருத்துவ குணங்கள்:

 pomegranate peel benefits in tamil

மாதுளை பழத்தில் தோலை காயவைத்து பொடி செய்து அதில் சம அளவு பயத்தம் பருப்பை கலந்து குடித்து வந்தால் வேர்வை துறுநாற்றங்கள் நீங்கும்.

மாதவிடாய் நேரங்களில் அதிகமாக போகும் இரத்த போக்கை குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது. அதோடு வயிற்று வலி, மூலநோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கும் உதவியாக இருக்கிறது.

மாதுளை தோலை உலர்த்தி மெல்லியதாக நறுக்கி கொண்டு வெந்நீரியில் ஊறவைத்து  சருமங்களில் பூசி வரும் பொழுது, சருமத்திற்கு தேவையான ஆரோக்கியமும், அழகும் கிடைக்கிறது.  இப்படி செய்து வருவதால் சருமத்தில் இருக்கும் கரும் திட்டுகள் மறைகின்றது.

மாதுளை தோல் பொடியை எடுத்து கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழைத்து அதை முக பருக்கள் இருக்கும் இடத்தில் பூசி வந்தால், முக பருக்கள்  இருந்த இடம் தெரியாமல் போகிவிடும்.

மாதுளையின் தோல்கள் புறஊதாக் கதிர்களின் சேதத்தில் இருந்து நம்மளுடைய சருமத்தை பாதுகாப்பதற்காக உதவியாக இருக்கிறது. அதேபோல் சிறு வயதிலே வயதான தோற்றங்கள் காணப்படுவதை இது குறைக்கிறது.

மாதுளை தோலில் அதிகமாக நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆனது  பாக்ட்டீரியாக்கள் மற்றும் பிற நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கிறது.

மாதுளை தோல் சருமத்திற்கு மிகவும் நல்லது, இதை உபயோகிப்பதால் சுற்றுச்சூழல் மாசுக்களில் இருந்து  சருமத்தை பாதுகாத்து, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கிறது.

தொண்டை வலிகளுக்கு வீட்டு வைத்தியமாக மாதுளை தோல் ஆனது உதவியாக இருக்கிறது.  மாதுளை தோலின் பொடியை வெயிலில் உலர்த்திய பிறகு தண்ணீரியில் கொத்திக்க வைத்து, வடிக்கட்டி ஆறவைத்து குடிப்பதால் தொண்டையில் ஏற்படும் வலிகள்  குணமாகிவிடும்.

இதய நோய்களில் அதிகமாக பாதித்தவர்கள், மாதுளை பொடியை சாப்பிடுவதால் கொழுப்புகளையும், மன அழுத்தத்தையும் குறைப்பதற்கும் உதவியாக இருக்கிறது. மாதுளை தோல் பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

வாயில் ஏற்படும் துறுநாற்றம் மற்றும் பல் வலி, ஈரல் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு மாதுளை தோலின் பொடியை தண்ணீரில் கொத்திக்க வைத்து வாய் கொப்பளித்து  வருவதால் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு உதவியாக இருக்கின்றது. மாதுளை தோல்  பொடியில் கருப்பு மிளகு தூள் சேர்த்து பற்களில் 10 நிமிடம் வைத்து வந்தால் பற்சிதைவை தடுக்கிறது. அதன் பிறகு 10 நிமிடம் கழித்ததும் வாயை வெந்நீரால் கழுவ வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்