Mayonnaise Side Effects in Tamil
இன்றைய கால கட்டத்தில் சாட் கடைகள், சாண்ட்விட்ச், பர்கர், சிக்கன் பார்பிக்யூ, க்ரில் போன்ற உணவுகளில் மைனஸ் இல்லாமல் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடும் உணவுகளில் சுவை அதிகரிப்பதற்காகவே மைனஸ் சேர்த்து சாப்பிடுகிறார்கள். ஆனால் எந்த பொருளையும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப எந்த பொருளையும் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு பிரச்சனையை தான் ஏற்படுத்தும். அதனால் இந்த பதிவில் மைனஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்:
மைனஸை அதிகமாக எடுத்து கொண்டால் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். அதனால் நீங்கள் தினமும் மைனஸை உணவில் சேர்த்து கொண்டால் சர்க்கரை நோயை ஏற்படுத்தும். அதுவே உங்களுக்கு சர்க்கரை நோய் பிரச்சனை இருந்தால் மைனஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
எடையை அதிகப்படுத்தலாம்:
தினமும் நெய் சாப்பிடுபவரா நீங்கள்..? அப்போ அதிலுள்ள தீமைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
இரத்த அழுத்த பிரச்சனை:
மைனஸில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களின் அளவு அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் நீங்கள் மைனஸ் அதிகமாக சாப்பிடும் போது மாரடைப்பு, பக்க வாதம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
இதய பிரச்சனையை ஏற்படுத்தும்:
மைனஸை அதிகமாக சாப்பிடுவது இதய பிரச்சனையை ஏற்படுத்தும். மைனஸில் 1.6 கிராம் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும். கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகரிக்கும் போது இதய பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது.
தலைவலி மற்றும் குமட்டல்:
மைனஸில் செயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தொடர்ந்து நீங்கள் மைனஸை உணவில் சேர்த்து வந்தால் தலைவலி, குமட்டல், உடல் பலவீனம் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
நீங்கள் தினமும் Chicken சாப்பிடுபவரா..! அப்போ இந்த பதிவு உங்களுக்கானது தான்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |