சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..! Sathukudi juice benefits in tamil
ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வருவதனால் வரும் நன்மைகளை(sathukudi juice benefits in tamil) பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த சாத்துகுடியில் நிறைய ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ளது. சரி வாங்க இப்போது சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் என்னென்ன பயன்கள், அதுமட்டும் இல்லாமல் குணமாகும் நோய்களை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!
தொண்டை புண் குணமாக சாத்துக்குடி ஜூஸ் / sathukudi juice benefits tamil:
சிலருக்கு சளி, வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகள் வருவதால் தொண்டையில் புண்கள் ஏற்படும். இதற்கு தீர்வு வெதுவெதுப்பான தண்ணீரில் தயாரித்த சாத்துக்குடி ஜூஸுடன் ஒரு சிட்டிகை அளவு உப்புவை சேர்த்து தொண்டையில் சிறிதுநேரம் ஜுஸை வைத்து குடித்துவர விரைவில் தொண்டை புண் குணமாகும்.
வாய் துர்நாற்றம் நீங்க சாத்துக்குடி ஜூஸ்:
sathukudi juice benefits in tamil:- சிலருக்கு காலையில் எழுந்தவுடன் வாய் துர்நாற்றம் அதிகமாக இருப்பதால் மிகவும் கவலைப்படுவார்கள். வாய் துர்நாற்றம் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் இந்த வாய் துர்நாற்றம் பிரச்சனை நீங்கும்.
புற்றுநோயை தடுக்கும் சாத்துக்குடி ஜூஸ்:
புற்றுநோய் உள்ளவர்கள் தினமும் இந்த சாத்துக்குடி ஜூஸ் குடித்து வரலாம். சாத்துகுடியில் இருக்கும் வைட்டமின் சி சத்து உடலில் உள்ள ஃப்ரீ ரேடிகல்ஸ்(Free Radicals), நோய்களினால் உண்டாகும் புற்றுநோயை வராமல் தடுக்கும் தன்மை வாய்ந்தது. சாத்துகுடியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் புற்றுநோய் செல்லின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும்.
இருதய நோய் குணமாக சாத்துக்குடி ஜூஸ் / sathukudi juice benefits tamil:
சாத்துகுடியில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்துவிடும்.
குறிப்பாக பெருந்தமணி தடிப்புகள் போன்ற பிரச்சனைகள் வருவதும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் கண்டிப்பாக நீங்கிவிடும். இருதய பிரச்சனை இருக்கும் அனைவரும் இந்த சாத்துக்குடி ஜூஸை தினமும் எடுத்து கொண்டால் இருதய நோய் விரைவில் குணமாகும்.
இறப்பை நோய் குணமாக சாத்துக்குடி ஜூஸ்:
சாத்துக்குடி ஜூஸ் அருந்துவதால் இறப்பை சம்மந்தப்பட்ட நோய்களான அஜீரணம், வயிற்றில் எற்படும் அல்ஸர், நெஞ்சு எரிச்சல், போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த சாத்துக்குடி ஜூஸ் குடித்து வரலாம்.
இதனால் வயிற்றில் உள்ள அமிலத்தை சமநிலையாக வைத்து செரிமான பிரச்சனையை சீரான நிலையில் வைத்திருக்க உதவுகிறது, அதோடு வாய்வு பிரச்சனையை தடுத்து நிறுத்தும் ஆற்றலை பெற்றுள்ளது இந்த சாத்துக்குடி ஜூஸ்.
உடல் எடை குறைய சாத்துக்குடி ஜூஸ்:
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் தாராளமாய் இந்த சாத்துக்குடி ஜுஸை குடிக்கலாம். சாத்துகுடியில் கலோரிஸ் மற்றும் கொழுப்பு தன்மை மிகவும் குறைவான தன்மையை பெற்றிருக்கிறது.
அதனால் உடல் எடை அதிகமாய் காணப்படுபவர்கள் காலையில் எழுந்தவுடன் தினமும் வெறும் வயிற்றில் இந்த ஜுஸை குடித்து வந்தால் கண்டிப்பாக உடல் எடை குறைந்து காணப்படும்.
உடலில் உள்ள இரத்தம் சுத்தமாக சாத்துக்குடி ஜூஸ்:
சாத்துகுடியில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்(Anti-Oxidants), மற்றும் பைட்டோகெமிக்கல்(Phytochemical) அடங்கியுள்ளது. சாத்துக்குடி ஜுஸானது இரத்தத்தில் கலந்து இருக்கும் நச்சு பொருள், மற்றும் உடலில் வளர்ச்சிதைவு மாற்றத்தினால் ஏற்படும் கழிவுகளையும் நீக்கும் தன்மை இந்த சாத்துக்குடி ஜுஸிற்கு உள்ளது. சாத்துக்குடி ஜூஸ் குடித்து வருவதால் கண்டிப்பாக உடலில் உள்ள இரத்தம் அனைத்தும் சுத்தமாகும்.
ஆஸ்த்மா நோய் சரியாக சாத்துக்குடி ஜூஸ்:
ஆஸ்த்மா நோய் உள்ளவர்கள், அதாவது மூச்சு விடும் போது பெரும் பிரச்சனையை சந்திப்பார்கள். இதன் காரணம் மூச்சு குழாய்கள் சுருங்கி போய் இருப்பதால் மூச்சு பிரச்சனை உள்ளவர்களால் சரியாக மூச்சு விட இயலாது.
ஆஸ்த்மா நோய் உள்ளவர்கள் இந்த ஜூஸ் குடிக்கலாம். இதனால் சுவாச பிரச்சனை சீராக இருக்கும்.
ஸ்கர்வி பிரச்சனை நீங்க சாத்துக்குடி ஜூஸ்:
ஸ்கர்வி நோய் வருவதற்கு காரணம் வைட்டமின் சி சத்து குறைவாக இருப்பதால் தான் இந்த பல் ஈறு பிரச்சனை வருகிறது. சாத்துகுடியில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் பல், ஈறுகளில் போன்ற பிரச்சனையை அனுபவித்து வருபவர்கள் இந்த சாத்துக்குடி ஜூஸ் குடித்து வரலாம்.
ஆர்த்ரடிஸ் நோய் குணமாக சாத்துக்குடி ஜூஸ்:
சாத்துகுடியில் அதிகமாக அமில தன்மை இருப்பதால் உடலில் இருக்கும் PH அளவை சமமாக வைத்திருக்கும். அதுமட்டும் இல்லாமல் ஆர்த்ரடிஸ் மற்றும் கீழ்வாத நோய் இருப்பவர்கள் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வரலாம்.
இதனால் நோயாளிகளின் உடலில் தேங்கி இருக்கும் யூரிக் அமிலங்களை குறைத்துவிடும். சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் ஆர்த்ரடிஸ் நோய் குணமாக வாய்ப்புள்ளது.
குறிப்பு:
சாத்துகுடியில் இருக்கும் சத்துக்கள்:
நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளதால் இதனை யோசிக்காமல் தாராளமாய் எடுத்துக்கொள்ளலாம்.
ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க ஜூஸ்..! |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | உடல் ஆரோக்கிய குறிப்புகள் |