முருங்கை கீரை நன்மைகள் | Murungai Keerai Benefits

Murungai Keerai Benefits

முருங்கைக் கீரை நன்மைகள் | Murungai Keerai Benefits

முருங்கையின் அனைத்து பாகங்களும் உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் காரணமாகவே தமிழர்களின் உணவு பழக்கங்களில் அதிகளவு முருங்கை கீரையை பயன்படுத்துகின்றன. சரி இந்த முருங்கை கீரையை நமது அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்வதன் மூலம் என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும், முருங்கை கீரையில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது போன்ற விவரங்களை இப்பொழுது நாம் இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க.

சுகப்பிரசவம் ஆக:

சுகப்பிரசவம் ஆக

Murungai Keerai Benefits:- கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து தங்களுடைய அன்றாட உணவு முறையில் முருங்கை கீரையை சேர்த்து கொள்வதன் மூலம் தங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல் தங்களுக்கு சுகப்பிரசவமும் ஆகும்.

முடி அடர்த்தியாக வளர:-

hair care

முருங்கைக் கீரை நன்மைகள்:- நாளுக்கு நாள் மாறிவரும் லைப்ஸ்டைல் காரணமாக அனைவரும் நமது உடல் நலத்தை பற்றி அதிகம் கவனிப்பது இல்லை. அந்த வகையில் அனைவரும் சந்திக்கும் பிரச்சனையில் ஒன்று தான் முடி உதிர்வு. இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு வேண்டும் என்றால்? தங்கள் உணவு முறையில் அதிகளவு முருங்கை கீரையை சேர்த்து கொள்ளுங்கள். இந்த முருங்கை கீரையில் உள்ள இரும்பு சத்து தங்கள் முடி உதிர்வு பிரச்சனையை தடுத்து, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும். மேலும் இளநரை பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து முருங்கை கீரையில் செய்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இளநரை நீங்கி, முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர செய்யும்.

40 கீரை வகைகள் அதன் பயன்களும்

உடல் ஆரோக்கியம் மேம்பட:

முருங்கை ஈர்க்கு

Murungai Keerai Benefits:- உடல் ஆரோக்கியத்தை மேம்ப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு கையளவு முருங்கை ஈர்க்குடன் மிளகு, சீரகம், சோம்பு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். இப்பொழுது முருங்கை கீரை சூப் தயார் இதனை தொடர்ந்து தயார் செய்து குடித்து வர காய்ச்சல், கை கால் வலி, மூட்டு வலி, ஆஸ்துமா, மார்புச்சளி, தலைவலி ஆகிய ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்படும்.

வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக:-

murungakkai

முருங்கைக் கீரை நன்மைகள்:- வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் முருங்கைக்காயுடன் சிறிதளவு ஓமம், ஒரு சிட்டிகை பெருங்காயம் தூள், மிளகு மற்றும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பின் இந்த சூப்பை மிதமான சூட்டில் அருந்திவர வயிறு சம்மந்தப்பட்ட அதாவது செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வயிற்று புண் போன்ற பிரச்சனைகள் குணமாவதுடன் உடல் நன்கு வலிமை பெரும்.

Murungai Keerai Powder Benefits in Tamil

ஆண் மலடு நீங்க:-

முருங்கை பூ

முருங்கைக் கீரை நன்மைகள்:- ஆண் மலடு நீங்க ஒரு கையளவு முருங்கைப்பூவுடன், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். வதக்கிய இந்த முருங்கைப்பூவை காலை உணவருந்துவதற்கு முன் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மலடு நீங்கி ஆண்மை தன்மையை அதிகரிக்கும்.

மேலும், முருங்கைப்பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்திவந்தால் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் இருப்பவர்களுக்கு நாட்டம் உண்டாகும். இதை இயற்கையான வயகரா எனக் கூறலாம்.

துத்தி கீரையின் மருத்துவ பயன்கள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியம்