உங்கள் நரம்புகள் பலம் பெற இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

நரம்புகள் பலம் பெற உணவுகள்

நரம்புகள் பலம் பெற சாப்பிடவேண்டிய உணவுகள்

வணக்கம் பொதுநலம்.காமின் அன்பான நேயர்களே. இன்று நம் ஆரோக்கியம் பதிவில் எல்லோருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்கப்போகிறோம். வாங்க நண்பர்களே அது என்ன தகவல் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம். நாம் அன்றாட வாழ்வில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்தான உணவுகள் எவ்வளவோ இருக்கின்றது. ஆனால் நாம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளை தான் சாப்பிடுகிறோம். இன்றைய காலகட்டத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுபவர்கள் குறைவாகவே உள்ளனர். இதுபோலவே நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கக்கூடிய உணவுகள் அதிகம் உள்ளன. இன்று நம் பொதுநலம் பதிவில் நரம்புகளுக்கு பலத்தை தரக்கூடிய உணவுகள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

நரம்புகள் பலம் பெற இயற்கையான உணவுகள்:

இன்றைய தலைமுறையினர் இந்த நரம்பு பிரச்சனையால் மிகவும் அவதிப்படுகின்றனர். இதன் மூலம் எழுதும் போது நடுக்கம், சோர்வு, களைப்பு, தலைவலி, நிலை தடுமாற்றம், கால் மற்றும் கை நரம்பு இழுப்பு தன்மை போன்றவை உண்டாகிறது. பொதுவாக நரம்புகள் பலம் பெறவேண்டும் என நினைப்பவர்கள் ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடவேண்டும்.

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்

நாம் ஊட்டச்சத்து குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவதால் பெர்னீசியஸ், அனீமியா எனும் ரத்தத்தை பாதிக்கும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய் ஏற்படுகிறது. வைட்டமின் B12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளின் வலுவைக் குறைய வைத்து நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கொடுக்கிறது. இது போன்ற பிச்சனைகளை சரி செய்ய சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி பார்ப்போம்.

அத்திப்பழம்:

அத்திப்பழம்

அத்திப்பழம் சாப்பிடுவதால் நரம்புகளுக்கு வலிமை தருகிறது. உடல் பலத்தை அதிகரிக்கிற சக்தி அத்திப்பழத்திற்கு உண்டு. அத்திப்பழத்தை தினமும் ஓன்று அல்லது இரண்டு பழம் சாப்பிடுவதால் நரம்புகள் புத்துணர்ச்சி பெறுவதோடு நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கிறது. இது நரம்பு தளர்ச்சியை சரி செய்கிறது.

பிரண்டை:

பிரண்டை

உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி பிரண்டைக்கு உண்டு. பிரண்டையை உணவில் சேர்த்து கொள்வதால் உடலுக்கு பலம் தருவதோடு நரம்புகளை வலுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இதை வாரம் இரண்டு முறை சாப்பிடுவதால் நரம்பு சம்பந்தப்பட்டபிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

புரத சத்து அதிகம் உள்ள உணவுகள்

மாதுளை பழம்:

மாதுளம்பழம்

நரம்பு மண்டலம் அதிகரிக்க மாதுளை பழம் சாப்பிடுவது நல்லது. மாதுளை பழம் சாப்பிடுவதால் உடல் சூட்டை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இது நரம்பு பிரச்சனைகளை சரி செய்து உடலை பலப்படுத்துகிறது. இது நரம்புகளை வலுப்படுத்துகிறது.

நரம்புகள் பலம் பெற உணவுகள்:

நெல்லிக்காய்:

நெல்லிக்காய்

நெல்லிக்காயை பற்றி தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது. நெல்லிக்காய் சாப்பிடுவதால் நரம்பு மண்டலம் வலுபெறுகிறது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. மேலும் இது நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

வெற்றிலை:

வெற்றிலை

வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இதை சாப்பிடுவதால் நன்கு பசியெடுக்கும். செரிமானக் கோளாறுகளைத் தடுக்கிறது. உடல் நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் சக்தி இந்த வெற்றிலைக்கு உண்டு.

வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்

கண் நரம்புகள் பலம் பெற: 

முருங்கைக் கீரை

பொதுவாக முருங்கைக் கீரைக்கு நரம்புகளை வலுப்படுத்தும் சக்தி அதிகமாகவே உள்ளது. பலவிதமான சக்தியை தரக்கூடிய கண்கண்ட மருந்து என்றும் கூறலாம். வாரத்திற்கு 3 முறை இதை சமைத்து சாப்பிடுவதால் நரம்புகளுக்கு பலத்தை கொடுத்து நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. இது கண் நரம்புகளை பாதிக்கும் செல்களை அளிக்கிறது. முருங்கைக் கீரை சாப்பிடுவதால் கண் நரம்புகள் பலம் பெற உதவுகிறது.

பேரிச்சைப்பழம்:

பேரிச்சைப்பழம்

பேரிச்சைப்பழத்தை பாலில் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது. இதை சாப்பிடுவதால் நரம்புகள் மற்றும் எலும்புகள் பலம் பெறுகிறது. இதை சாப்பிடுவதால் பலகீனமான உடல் கூட பலம் பெறுகிறது.

பழங்கள்: 

வயதானவர்கள் தினமும் ஏதாவதொரு பழம் சாப்பிடுவதன் மூலம் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

கீரைகள்:

நரம்புகள் பலம் பெற கீரைகள் நல்ல பலன் அளிக்கின்றன. பொதுவாக பொன்னாங்கண்ணி மற்றும் மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் நரம்புகளை பலப்படுத்துகிறது. தினமும் ஏதாவதொரு கீரைகளை சாப்பிடுவதன் மூலம் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்