Neck and Back Pain Treatment in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்க கூடிய உடல் பிரச்சனைகளில் கழுத்து மற்றும் முதுகு வலி பிரச்சனையும் ஒன்று. இந்த பிரச்சனைக்காக எவ்வளவோ மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனை படி சாப்பிட்டு வந்தாலும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்பது பலருடைய புலம்பலாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த வலியானது வளரும் குழந்தைகளுக்கும் வர ஆரம்பமாகிறது. ஆகையால் வீட்டில் இருந்து 7 நாட்களில் கழுத்து மற்றும் முதுகு வலியை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஆரோக்கியான பேஸ்ட் செய்து உங்களுடைய வலிகளை விரட்டி அடிக்கலாம் வாங்க..!
இதையும் படியுங்கள்⇒ உடல் இளைக்க இதை மட்டும் தினமும் காலை செய்து சாப்பிடுங்கள் போதும்..
முதுகு கழுத்து வலி குணமாக:
கழுத்து மற்றும் முதுகு வலி குணமாக ஆரோக்கியம் நிறைந்த பேஸ்ட் தயார் செய்வது மற்றும் அதனை சாப்பிடும் முறை பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேவையான பொருட்கள்:
- வால்நட் – 50 கிராம்
- உலர் திராட்சை- 50 கிராம்
- பாதாம்- 50 கிராம்
- எலுமிச்சை பழம்- 1
- தண்ணீர்- 50 முதல் 100 கிராம் வரை
செய்முறை:
ஸ்டேப்- 1
முதலில் 50 கிராம் வால்நட்டை எடுத்துக்கொண்டு அதனை மிகவும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
இரண்டாவதாக ஒரு பேப்பர் அல்லது காட்டன் துணியை எடுத்துக்கொண்டு அதில் எடுத்துவைத்துள்ள 50 கிராம் உலர் திராட்சையை போட்டு மூடி விடுங்கள்.
அதன் பிறகு உங்களுடைய கைகளால் திராட்சையின் மேலே இருக்கும் துணியினை நன்றாக அழுத்தி விடுங்கள். இதே போல நன்றாக 5 நிமிடம் செய்து விட்டு பின்பு திராட்சையை தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 3
இப்போது 50 கிராம் பாதாமை எடுத்துக்கொண்டு இதையும் மிகவும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
அடுத்ததாக 1 எலுமிச்சை பழத்தை எடுத்துக்கொண்டு அதன் மேலே இருக்கும் தோலினை முழுவதுமாக நீக்கி விட்டு அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து விடுங்கள்.
ஸ்டேப்- 5
கடைசியாக வலியை போக்குவதற்கான வைட்டமின்கள் நிறைந்த பேஸ்ட் தயார் செய்ய வேண்டும். அதற்கு முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கி வைத்துள்ள எலுமிச்சை பழம், வால்நட், பாதாம் மற்றும் உலர் திராட்சை ஆகியவற்றை போட்டு அதனுடன் 50 கிராம் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 6
மிக்சியில் இருக்கும் பொருட்கள் சிறிது நேரம் அரைபட்டதும் அதனை திறந்து பார்த்து மீண்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
மிக்சியில் இருக்கும் பொருட்கள் நன்றாக அரைபட்டு கெட்டியாக பேஸ்ட் போன்ற பதத்திற்கு வந்தவுடன் அதனை கண்ணடி பாத்திரங்களில் வைத்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இந்த பேஸ்ட் கண்ணாடி பாத்திரங்களை தவிர வேறு எந்த பாத்திரத்திலும் வைக்கக்கூடாது.
ஸ்டேப்- 7
நீங்கள் தயார் செய்த இந்த பேஸ்ட்டில் வைட்டமின்கள் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் போதும் 7 நாட்களில் கழுத்து மற்றும் முதுகு வலி பிரச்சனை மறைந்து போகிவிடும். அதுமட்டும் இல்லாமல் உடல் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
7 நாட்களில் உங்கள் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ் இதோ உங்களுக்காக..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |