ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

Advertisement

Oats Side Effects in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய நவீன காலகட்டத்தில் மிகவும் எளிதான முறையில் சமைக்க கூடிய சாப்பாட்டை தான் அனைவரும் விரும்புகின்றனர். அந்த வகை சாப்பாட்டில் ஓட்ஸ்ம் ஒன்று. ஓட்ஸில் அதிக நார்ச்சத்து, தாவர வேதிப்பொருட்கள் அதிகமாக இருக்கின்றன. அத்தகைய ஓட்ஸை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. ஆனால் எதையும் அளவோடு சாப்பிட வேண்டும். அப்படி இல்லை என்றால் உடலுக்கு பக்க விளைவுகள் ஏற்படும். அத்தகைய ஓட்ஸில் பக்கவிளைவுகள் இருக்கின்றன. அது என்னென்ன பக்கவிளைவுகள் என்பதை இன்றைய ஆரோக்கிய பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளாமல் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ வால்நெட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா.?

ஓட்ஸ் என்றால் என்ன?

ஓட்ஸ் Avena Sativa என்ற தாவரத்தில் இருந்து விளைவிக்க கூடிய உணவுப்பொருட்கள் ஆகும். இந்த ஓட்ஸை பயிரிடுவதற்கு குறைந்த அளவு தண்ணீர் மற்றும் குறைந்த அளவு உரம் இருந்தால் போதுமானது. அதிக ஈரப்பதம் உள்ள இடத்தில் இந்த ஓட்ஸ் விளைவிக்க படுகிறது.

ஆரம்ப காலகட்டத்தில் ஓட்ஸை அதிக அளவு விலங்குகளுக்கு மட்டுமே உணவாக கொடுத்து வந்தனர். அதன் பிறகு ஓட்ஸில் இருக்கும் சத்துக்கள் தெரியவந்ததும் மக்கள் அதை அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு ஓட்ஸில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.

ஓட்ஸ் அதிகளவு தயாரிக்கப்படும் நாடுகள்:

அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கனடா, போலந்து, பின்லாந்து ஆகிய நாடுகளில் ஓட்ஸை அதிகளவு தயார் செய்து வருகின்றனர்.

வெந்தயம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா.?

ஓட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்:

oats theemaigal in tamil

ஓட்ஸை நாம் அதிகளவு சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஓட்ஸ் சாப்பிடுவதில் அல்லது விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டால் அதனை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

ஓட்ஸை சாப்பிடும் போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடவில்லை என்றால் நம்முடைய குடல் அமைப்பில் பாதிப்பு வர வாய்ப்பு இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் ஓட்ஸை தொடர்ந்து சாப்பிட கூடாது. ஒரு வேளை அப்படி தொடர்ந்து சாப்பிட்டால் உணவுக்குழாய், வயிறு மற்றும் குடல் சம்மந்தமான செரிமான மண்டலத்தில் பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.

ஓட்ஸை நாம் சாப்பிடும் போது பசி எடுக்காது. பசி உணர்வு இல்லாமல் ஆகிவிடும். அதனால் அளவோடு எடுத்து கொள்ள வேண்டும்.

நம்முடைய வீட்டில் ராகி, கேழ்வரகு, கம்பு சாப்பிடுவார்கள் அதனுடன் ஒப்பிடும்போது ஓட்ஸில் குறைந்து அளவு மட்டுமே சத்துக்கள் உள்ளன.

ஆகவே ஓட்ஸை நாம் அளவோடு சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டாலே தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil

 

 

 

 

Advertisement