ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் உணவுகள் | Omega 3 Fatty Acid Fish in Tamil
மீன் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதிலும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் அசைவ உணவு வகைகளிலிருந்து தான் கிடைக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு இந்த ஒமேகா சத்தானது அதிகமாக உதவுகிறது. நம் உடலுக்கு அதிகம் ஊட்டச்சத்து தரக்கூடிய ஒமேகா 3 உள்ள மீன் வகைகள் சிலவற்றை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
விரால் மீன் நன்மைகள் |
முரண் கெண்டை மீன்:
முரண் கெண்டை மீனை அதிக பசியில் இருப்பவர்கள் பசியினை கட்டுப்படுத்துவதற்கு இந்த மீனை சாப்பிடலாம். இந்த மீன் வகையில் புரதச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், நியாசின், வைட்டமின் பி12 மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த முரண் கெண்டை மீனில் கலோரிகள் குறைந்த அளவில் இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த மீனை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.
சால்மன் மீன்:
சால்மன் மீனில் அதிகளவு ஒமேகா 3 அமிலம் நிறைந்துள்ளது. இந்த மீனில் ஒமேகா 3 மட்டும் நிறைந்துள்ளாமல் உயர் ரக புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், நியாசின், வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் உள்ளது.
எலும்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கு வைட்டமின் பி 12 சத்தானது மிகவும் உதவுகிறது. எனவே கர்ப்பிணி பெண்களுக்கு சால்மன் மீனை கொடுப்பதன் மூலம் கருவில் இருக்கக்கூடிய குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சி நன்றாக இருக்கும்.
கானாங்கெளுத்தி மீன்:
இந்த கானாங்கெளுத்தி மீன் கருவாடாகவும் பயன்படுகிறது. இந்த மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி 12, நியாசின், செலினியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. 100 கிராம் கானாங்கெளுத்தி மீனில் 161% கலோரிகளும், 25 கிராம் புரத சத்தும் நிறைந்துள்ளது.
மத்தி மீன்:
இந்த மீனில் இருக்கக்கூடிய முட்கள் மிகவும் மெல்லிய தன்மையில் இருப்பதால் இந்த மீனை முட்களுடன் சாப்பிடலாம். இது ஒரு எண்ணெய் வகை சேர்ந்த மீனாகும். இந்த மீனில் புரதசத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகளவு நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் டி, நியாசின் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. 100 கிராம் மத்தி மீனில் 208 கலோரிகளும் 25 கிராம் புரதமும், 353 மில்லி கிராம் புரதமும் உள்ளது.
நெத்திலி மீன்:
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான மீன் என்றால் அது நெத்திலி மீன் தான். அனைத்து மளிகை கடைகளிலும் நெத்திலி மீனானது கருவாடு வகைகளிலும் கிடைக்கிறது. நெத்திலியில் புரதம், கால்சியம், பொட்டாசியம், செலினியம், வைட்டமின் பி 12 மற்றும் நியாசின் ஆகியவற்றை அதிகமாக கொண்டுள்ளது.
ஹாலிபட் மீன்:
இந்த ஹாலிபட் மீன் அதிகமாக எண்ணெய் தன்மை கொண்டுள்ளது. இது கடல் மீனில் ஒன்றான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவே நிறைந்துள்ளது. கொழுப்பு அமிலங்கள் மட்டுமல்லாமல் புரதச்சத்து, பொட்டாசியம், நியாசின் போன்ற சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளது. 100 கிராம் ஹாலிபட் மீனில் 90 கலோரிகள் மற்றும் 19 கிராம் புரதம் உள்ளது.
மீன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? – சத்துள்ள மீன் வகைகள் இதோ.. |
ரெயின்போ ட்ரவுட் மீன்:
ரெயின்போ ட்ரவுட் என்பது வெள்ளை நிறத்தை சேர்ந்த லேசான மீன் வகையாகும். சால்மன் மீனின் சுவை பிடிக்காதவர்கள் இந்த வகை மீனை சாப்பிடலாம். இது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களையும் கூடவே புரதம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் நியாசின் போன்ற சத்துக்களையும் அதிகமாக கொண்டுள்ளன.
சூரை மீன்:
சூரை மீன் என்பது கடல் வகை மீனை சேர்ந்ததாகும். இந்த மீனில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இந்த மீன் கர்ப்பிணி பெண்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் இந்த மீன் ஏற்றது இல்லை. இந்த மீன் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி 12 மற்றும் நியாசின் ஆகியவற்றை அதிகமாக கொண்டுள்ளது.
மேல் கூறிய மீன்கள் அனைத்தும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக கொண்டுள்ளது. இதனை நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in Tamil |