சினைப்பைப் புற்றுநோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் பற்றி தெரியுமா..!

ovarian cancer in tamil

சினைப்பை அல்லது சூல்பை புற்றுநோய் என்றால்  என்ன?

நமது உடலில் எந்த விதமான சத்தமும் இல்லாமல் உருவாகி கொஞ்சம் கொஞ்சமாக உயிரை கொள்வது புற்றுநோய். மக்கள் புற்றுநோய் என்றாலே தீராத ஒரு நோயாகவும் மரணத்தின் வாசலுக்கு அழைத்து செல்லக்கூடிய நோய்  என்று பயப்படுகின்றனர். புற்றுநோய் வந்தால் மரணம் நிச்சயம் என்று முடிவும் செய்துவிடுகிறார்கள். மார்பக புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், தோல் புற்றுநோய் இது போன்ற  நிறைய வகையான புற்றுநோய்கள் பற்றி சொல்லி கொண்டே போகலாம். அந்த வகையில் சூல்பைப் புற்றுநோய் அதன் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி விரிவாக இன்றைய பதிவில் தெரிந்துகொள்வோம்  வாங்க…!. எந்த நோயாக  இருந்தாலும் ஆரம்ப நிலையில் கண்டறிந்து வருமுன் காப்பது சிறந்த தீர்வினை தரும்.

பெண்ணின் உடலில் சினைப்பை மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் சினைப்பை
புற்றுநோய்  உண்டாகிறது. சினைப்பையில் இருக்கும் உயிரணுக்களில் கட்டிகள் வளர்கின்றன. கட்டிகளில் இரண்டு பிரிவுகள் உள்ளன:

1.எபிதெலிக்ஸ் கட்டிகள்
2.ஸ்ட்ரோமல் கட்டிகள் 

இரத்த புற்றுநோய் அறிகுறிகள்

சினைப்பை புற்றுநோய்  அறிகுறிகள்:

சினைப்பை புற்றுநோய் வருவதற்கு 40% முதல் 60% வரை மட்டுமே வாய்ப்பு உண்டு. 35 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் அனைவரும் மார்பக புற்றுநோய், சினைப்பை புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய்கான பரிசோதனையை வருடம் ஒருமுறை தவறாமல் செய்யவேண்டும். சினைப்பை புற்றுநோய்யை பொறுத்தவரை 50 முதல் 60 வயது உள்ள பெண்கள் மட்டுமே பாதிப்பு அடைகின்றனர்.

அடிவயிற்று பகுதி வலி:

stomatch pain in tamil

சினைப்பை புற்றுநோய்  அறிகுறியாக ஆரம்ப நிலையில் பெண்கள் வயிற்றில் அதிக வலியுடன் கூடிய வீக்கத்தினை எதிர்கொள்கின்றனர். அடிவயிற்று பகுதியில் இருந்துதான் குறிப்பாக இந்த வலி ஆரம்பமாகிறது.

பசி எடுக்கவில்லை:

பசியின்மை

சாப்பிடுவதற்கு முன்பே வயிறு நிறைவாக இருப்பதுபோல் காணப்படும். பசி உணர்வு சுத்தமாக இருக்காது. இதை போன்ற உணர்வுகள் பெண்களுக்கு இருக்கிறது.

உடல் எடை குறைவு:

எடை குறைவு என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று. சினைப்பை புற்றுநோய் அறிகுறியில் உடல் எடை  குறைவும் முக்கியமான ஒன்று. ஆகையால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.

எரிச்சல் ஏற்படும்:

எரிச்சல் ஏற்படுதல்

பெண்களின் பிறப்பு உறுப்பில் எரிச்சல், அரிப்பு இதுபோன்ற அறிகுறிகள் தோன்றும். சினைப்பை புற்றுநோயால் பாதிக்க பட்டவர்களுக்கு இயல்பான ஒன்றாக உள்ளது.

உடல் சோர்வு மயக்கம்:

பெரும்பாலும் பசியின்மை இல்லாத காரணத்தினால் உணவு சரியாக உட்கொள்ள முடியாமல் இருக்கும். இதன் விளைவாக உடல் சோர்வு அடிகடி மயக்கம் போன்ற
பிரச்சனைகளும் வருகிறது.

முதுகு வலி:

அடிவயிற்று பகுதி மட்டுமில்லாமல் முதுகு வலியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான அறிகுறியாகும். இந்த பிரச்சனை இருப்பதனால் ஒரு இடத்தில் அதிக நேரம் இவர்களால் அமரமுடியாத.

செரிமான கோளாறு:

செரிமான கோளாறு

சரியாக உணவு சாப்பிடாமல் இருப்பது இப்படி அறிகுறிகள் இருக்கும்போது குடல் செயல்பாடுகள் நடை பெறாமால் போகிவிடும். அதனால் செரிமான கோளாறு, மலச்சிக்கல் போன்ற விளைவுகள் வரும்.

சிறுநீர் கழித்தல்:

சிறுநீர் கழித்தல்

பெண்களுக்கு ஆரம்பநிலை முதல் அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருக்கும்.

இடுப்பு பகுதியில் சினைப்பை இருப்பதால் ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் இருப்பதில்லை. அதனால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil