சரும பிரச்சனைக்கான பாட்டி வைத்தியம்

Advertisement

சரும பிரச்சனைக்கான  பாட்டியின் இயற்கை வைத்தியம் 

வணக்கம் நண்பர்களே..! இன்று நம் பொதுநலம்.காமில் ஆரோக்கியம் பதிவில் எல்லாருக்கும் பயனுள்ள பாட்டியின் இயற்கை வைத்தியத்தை பற்றித் தான் பார்க்கப் போகின்றோம். சரும பிரச்சனைக்கு கிரீம்  வகைகள் தான் தீர்வு என்று நினைக்காமல், இயற்கை வைத்தியம் பக்கமும் திரும்பலாம். தோல் அரிப்பிற்கு காரணம் பல வகைகள் உண்டு, அவை  படைநோய், வெடிப்பு, கடி , பூஞ்சைத்தழும்புகள், பூச்சிக்கடி, அரிப்பு அலர்ஜி, படர்த்தாமரை, தேமல்,சொறிசிரங்கு, தோல் நிறம் மாறுதல் ஆகிவை ஆகும். இது அனைத்து வயதினருக்கும் வரும் சரும பிரச்சனையே ஆகும். இதை இயற்கை முறைகளில் கட்டுப்படுத்துவதால் எந்த வித பக்கவிளைவுகளும் இருக்காது. இது பொதுவாக குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படும். அதேபோல் வறண்ட சருமத்தை உடையவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் இருக்கும். இது போன்ற பல விதமான  பிரச்சனைகளை பாட்டியின் இயற்கை வைத்தியத்தில் எப்படி சரிசெய்வது என்று நம் பதிவில் பார்க்கலாம் வாங்க….

பல நோய்களுக்கு வீட்டு வைத்தியம்..!

சரும பிரச்சனைகள் ஏற்படுவதன் காரணம்: 

பெரும்பாலும் சருமத்தில் பிரச்சனை வருவதற்கு காரணம் என்ன தெரியுமா ? மற்றவருடைய சோப்பு, துணி அல்லது துண்டை உபயோகிப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நாம் சாப்பிடும் உணவு, வீட்டில் தூய்மை இல்லாமை,  போன்ற பல காரணங்களால் தோல்களில் அரிப்பு ஏற்படுவதற்கு காரணமாய் உள்ளது. அதுமட்டுமில்லாமல் நமது தோல்  உடல் உறுப்புகளை மட்டும் பாதுகாப்பது மட்டுமின்றி உடலில் வெப்பநிலையை சமப்படுத்தவும் வேர்வையை  வெளிப்படுத்துவும் உதவுகின்றது. தோல்களில்  உள்ள நுண்கிருமிகள் இரத்தத்தில் கலப்பதற்கும வாய்ப்பு இருக்கிறது.  எனவே அனைத்து தோல் நோய்களும் நீங்குவதற்க்கு  பாட்டி  சொல்லும் இயற்கை  வைத்தியம்.

டிப்ஸ்: 1 

தோல் அரிப்பு, சொறி குணமாக  15 முதல் 20  குப்பைமேனி இலைகளில் எடுத்துக்கொண்டு அதோடு 1/2 ஸ்புன் மஞ்சத்தூள் சேர்த்து நன்கு இடிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால்  அரைத்து கொள்ளலாம். அதன் பிறகு ஒரு கடாய் எடுத்து 2 ஸ்புன் தேங்காய் எண்ணையை ஊற்றவும்.  பின்பு இடித்து வைத்த மூலிகையை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பிறகு அதை ஆறவைத்து  நம் உடலில் எங்கெல்லாம் சொறி அரிப்பு இருக்கின்றதோ அங்கு தடவி வந்தாலே போதும்.

 டிப்ஸ்: 2

அரிப்பு புண்கள் குணமாக கீழாநெல்லி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொண்டு அதை அரைத்து உடம்பில் எங்கெல்லாம் அரிப்பு இருக்கிறதோ அந்த  இடத்தில் தடவி வருவதால் ஒரு வாரங்களில் மறையும். அதுமட்டுமில்லாமல் புண்கள்  இருக்கும் இடங்களுக்கும் தடவி வரலாம். அதன் பிறகு 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.

டிப்ஸ்: 3

தேமல்கள் குணமாக  கீழாநெல்லி மற்றும் கொத்தமல்லி இலைகளை தேவையான அளவு எடுத்து அதில் பால் விட்டு அரைக்கவும். தேமல் இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம்  கழித்து குளித்து வந்தால் சில வாரங்களில்  இருந்த இடம் தெரியாமல் போகிவிடும். அதுமட்டுமில்லாமல் மலைவேம்பு இலைகளை அரைத்து சாறு பிழிந்து  உடம்பில் பூசி வந்தால் தேமல் குணமாகும்.

டிப்ஸ்: 4

அரிப்பு மற்றும் தடிப்புகள் சரியாக தினமும் காலை, மாலை என இருவேளையும் கரும் துளசியோடு மூன்று மிளகு வைத்து சாப்பிட்டு வந்தால் அரிப்பு மற்றும்  தடிப்புகள் குணமாகும்.

டிப்ஸ்: 5

படர்த்தமரை குணமாக  ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு  நசுக்கிய பூண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பிறகு அதை வடிகட்டி காலை, மாலை என இருவேளைகள் படர்தாமரை இருக்கும் இடத்தில்  தேய்த்து குளித்து வந்தால் படர்தாமரை சில வாரங்களில் மறைந்து போகிவிடும்.

டிப்ஸ்: 6

படை குணமாக முருங்கை இலையை சிறிதளவு எடுத்து கொண்டு அதில் உப்பு சேர்த்து அரைத்து, சாறு பிழிந்து எடுத்து கொள்ளவும்.  படை இருக்கும் இடத்தில்  தினமும்  இரண்டு வேலை தடவி வந்தால் படை இருந்த இடம் தெரியாமல் குணமாகிவிடும்.

டிப்ஸ்: 7

சொறி சிறகு மற்றும் தேமல் குணமாக வெற்றிலை மற்றும் துளசியை அரைத்து தேமல் இருக்கும் இடத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து குளித்து வந்தால் சொறிசிரங்கு, தேமல் சில வாரங்களில் மறைந்து விடும்.

டிப்ஸ்: 8

நகம் அரிப்பு மற்றும் தோல் நோய்  குணமாக சதுர கள்ளிபால் எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி எடுத்து கொள்ளவும். தோல் நோய்கள், நகம் அரிப்பு போன்ற இடங்களில் தடவி வந்தால் சில வாரங்களில் குணமாகும்.

டிப்ஸ்: 9

தலை அரிப்பு மற்றும் ஒவ்வொமை குணமாக  சதுர கள்ளி பாலில் மிளகு சேர்த்து வெயிலில் நன்கு காயவைக்கவும். அதை 10 நாட்கள் காய வைக்க வேண்டும். இதை  தேய்த்து வந்தால் தலை அரிப்பு மாறும் ஒவ்வொமை குணமாகும்.

டிப்ஸ்: 10 

சிறு குழந்தைகளுக்கு வரும் அரிப்புகளை கட்டுப்படுத்த கொழுந்து வேப்பிலைகளை  எடுத்து கொண்டு அதில் விரலிமஞ்சள் சேர்த்து அரைக்கவும்.  குழந்தைகளுக்கு அரிப்பு இருக்கும் இடங்களில் தடவி வந்தால் சீக்கிரமாகவே குணமாகும். அதுமட்டுமில்லாமல் அதை குழந்தைகளுக்கு குடித்து வந்தால் வயிற்று பூச்சிகள் வெளியேறிவிடும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement