பல்லி எச்சத்தை சரிசெய்யும் வீட்டு வைத்தியமுறை
வணக்கம் நண்பர்களே 🙏 இன்று நம் பொதுநலம்.காமில் பல்லி எச்சத்தை சரிசெய்யும் வீட்டு வைத்தியத்தை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாகவே சிலர் வீட்டில் பல்லிகள் அதிகமாவே இருக்கும். இரவு தூங்கி எழுந்தவுடன் காலையில் பார்த்தால் உதட்டின் மேல் பகுதில் பல்லி எச்சம் செய்த்திருக்கும் என்று நினைத்திருப்போம். ஆனால் இது பல்லி எச்சம் கிடையாது. இதனை சத்துக்கள் குறைபாட்டால் வரும் அக்கி, வாய்ப்புண் என்றும் சொல்கிறார்கள். இது சிலருக்கு சிவந்த வடிவில் இருக்கும். எரிச்சலையும் தருகிறது. இரண்டு நாட்களுக்கு பிறகு பார்த்தால் இது வட்டமாக படர்ந்து கருமையாக மாறுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க…
வாய் புண் குணமாக மருத்துவம் |
பல்லி எச்சம் | உதட்டில் புண் | அக்கி ஆகியவை வருவதற்கு காரணம் என்ன தெரியுமா?
இந்த வைரஸ் ஒருவருடைய பொருளை மற்றவர் உபயோகிக்கும் பொழுது பரவுகின்றது. அதாவது துணி, லேசர், உணவு உட்கொள்ளும் பாத்திரங்கள் மூலமாவும் வருகிறது என்று சொல்லப்படுகிறது. இது சிலருக்கு திரும்ப திரும்ப வரவும் வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போவதாலும் வருகின்றது. இது சிலருக்கு தொடர்ந்து வந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த வைரஸ் உதட்டில் வருவதால் உதடுகளில் அரிப்பு காணப்படும். பிறகு அந்த இடங்களில் பொரிப்பொரியாக சிவந்து காணப்படும். அதன் பிறகு அதில் இருந்து தண்ணீர் வடியும். அந்த தண்ணீர் படும் இடம் முழுவதும் அதே போல் மாறிவிடும்.
வீட்டில் இருந்து சரி செய்யும் வைத்திய முறைகள்:
டிப்ஸ்:1
எச்சம் மற்றும் வாய் புண்களை சரி செய்வதற்கு 2 வெற்றிலை மற்றும் பூண்டு பல் 3 எடுத்து அரைத்து சாறு பிழிந்து கொள்ளவும். இந்த சாறை உதட்டில் புண் இருக்கும் இடத்தில் வைக்கவேண்டும். சாறு காய்ந்தவுடன் மறுபடியும் வைத்து வந்தால் இருந்த இடம் தெரியாமல் போகிவிடும்.
டிப்ஸ்:2
ஒரு சிலருக்கு உதட்டில் உள்ள புண் சிவந்து எரிச்சல் காணப்படும். அவர்கள் வீட்டில் இருக்கும் ஐஸ் கட்டியை எடுத்து அந்த புண்களில் வைத்தால் எரிச்சல் குணமாகி புண்கள் ஆறிவிடும்.
டிப்ஸ்:3
நீங்கள் வீட்டில் முகத்தை சோப்பை பயன்படுத்தி கழுவிய பின்பு, முகத்தை ஒரு காட்டன் துணியில் துடைக்கவும். வீட்டில் உபயோகிக்கும் தேங்காய் எண்ணையை உதட்டின் புண்களில் தடவி வரலாம். அப்படி இல்லை என்றால் Vaseline உபயோகிக்கலாம்.
டிப்ஸ்:5
இந்த உதட்டு புண்களுக்கு சோற்றுக் கற்றாழை ஜெல் போடுவதால் புண்கள் சீக்கிரமாக புண்கள் மறைந்து விடும்.
டிப்ஸ்:6
ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் புதினா இலையை ஊறவைத்து ஒரு காட்டன் துணியில் நனைத்து அந்த புண்களின் மேல் வைத்து வந்தால் புண்கள் சீக்கிரமாக சரியாகிவிடும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |