பப்பாளி பழம் பயன்கள் | Papaya Fruit Benefits in Tamil
Papaya Health Benefits in Tamil: விலை மிகவும் மலிவான பழங்களுள் ஒன்றுதான் இந்த பப்பாளி. இந்த காலத்தில் தான் கிடைக்கும் என்று இல்லை. பப்பாளி அனைத்து சீசன்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. பப்பாளி பழத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, ஏராளமான நன்மைகள் ஒளிந்திருக்கிறது. இந்த பழமானது மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலும், சில நேரத்தில் பச்சை கலந்த நிறத்திலும் தென்படும். 18 வகையான சத்துக்கள் நிறைந்த பழம் தான் இந்த பப்பாளி. உடல் ஆரோக்கியம் பெற சத்து மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்த்து தினமும் ஒரு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழலாம். சரி வாங்க பப்பாளி பழத்தின் மகத்தான நன்மைகளை பற்றி படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
பழங்களும் அதன் மருத்துவ பயன்களும் |
நோய் தொற்று பரவாமல் இருக்க:
papaya benefits in tamil: தினமும் ஒரு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த வித நோய் தொற்றுகளும் நம்மை அண்டாது. பப்பாளியில் விஷக்கிருமிகளை கொள்ளும் ஆற்றல் இருப்பதால் இரத்தத்தில் நோய் கிருமிகளை தங்க விடாமல் பாதுகாக்கும்.
குழந்தைகளுக்கு மிகவும் நல்லது:
papaya fruit benefits in tamil: சிறிய குழந்தைகளுக்கு தினமும் பப்பாளி பழம் தவறாமல் கொடுத்து வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் வலிமை அடையும். மேலும் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே ஏற்படும் கண் கோளாறு பிரச்சனை குறையும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
புண்கள் குணமாக:
பப்பாளி பழ விதைகளை நன்றாக அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர நாக்குப்பூச்சிகள் குறைந்துவிடும். மேலும் வாயில் ஏற்படக்கூடிய புண், அடிபட்ட புண்கள் மேல் பப்பாளிக் காயின் பாலை தடவிவர புண்கள் விரைவில் ஆறும்.
ஆண்களின் முகத்தை பட்டுபோல வைக்கும் பப்பாளி இலை..! |
உடல் எடை குறைய:
பப்பாளி பழம் நன்மைகள்: அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்கள் காலை உணவாக தினமும் பப்பாளி பழத்தினை சாப்பிட்டு வர உடல் எடை குறைந்து காணப்படும். உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் 4 வாரம் தொடர்ச்சியாக பப்பாளி பழத்தினை சாப்பிட்டு வர உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கும். மேலும் இந்த பப்பாளி காயினை சமைத்தும் சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
முகப்பரு நீங்க பப்பாளி:
papaya benefits in tamil: பெரும்பாலும் சரும அழகையே கெடுப்பது முகத்தில் ஏற்படும் பருக்கள் தான். முகப்பரு உள்ளவர்கள் பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை லேசாக பருக்கள் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். இது சருமத்தில் உள்ள பருக்களைப் நீக்கி சருமத்தை பொழிவுபடுத்தி, முகத்தில் உள்ள சுருக்கங்களையும் நீக்கி அழகாக வைத்திருக்கும்.
மாதவிடாய் சரியாக வர என்ன செய்வது:
papaya benefits in tamil: பெண்கள் சிலருக்கு மாதவிடையானது மாதம் மாதம் சரியான நிலையில் வராது. அதற்கு ஒரே தீர்வு பப்பாளி பழம் சாப்பிட்டு வர மாதவிடாய் சீராக வரும். மாதவிடாய் காலத்தில் அடி வயிற்றில் ஏற்படும் வயிற்று வலிக்கு பப்பாளி நல்ல மருந்தாக இருக்கிறது.
வயிறு சம்பந்தமான பிரச்சனைக்கு:
papaya fruit benefits in tamil: குடல் பகுதியில் உள்ள புழுக்கள் நீங்க பழுக்காத பச்சை பப்பாளியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கியோ அல்லது அதனுடைய சாறுவை குடித்து வந்தால் குடல் புழுக்கள் நீங்கும். மேலும் கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைக்களுக்கும் பப்பாளி நல்ல தீர்வாக இருக்கிறது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |