
மாதவிடாய் வருவதற்கான அறிகுறி | Periods Symptoms in Tamil
பெண்களாக பிறந்த அனைவருக்கும் பருவம் எய்த பிறகு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவது இயற்கை. ஒரு சிலருக்கு மாதவிடாய் வரும் சுழற்சியை நியாபகம் வைத்து கொள்வது சிரமம், ஆனால் ஒவ்வொரு பெண்ணும் தனது மாதவிடாய் சுழற்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் வருவதற்கு முன்பு பெண்களுக்கு உடம்பில் சில அறிகுறிகள் தென்படும், அதை பற்றிய சில விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
மாதவிடாய் வருவதற்கான அறிகுறி:
- மாதவிடாய் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே (PMS) பதட்டம் வர ஆரம்பித்துவிடும். பி.எம்.எஸ் (Premenstrual Syndrome) சமயத்தில் பெண்களின் வயிறு, மார்பகங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மாதவிடாய் வருவதற்கு முன்பாக வழக்கமான நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படும்.
முகப்பரு – Periods Symptoms in Tamil:

- Periods Symptoms Tamil: ஒரு சில பெண்களுக்கு முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்து விடும். இது ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும். இந்த பருக்கள் ஒரு வாரத்திற்கு முகத்தில் இருக்கும்.
உடல் சோர்வு – மாதவிடாய் அறிகுறிகள்:

- Symptoms of Periods in Tamil: மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக வயிறு வீக்கம், மார்பங்களில் வீக்கம், பாதங்கள் வீங்கி போதல், செரிமான கோளாறு, உடல் அசதி, சோர்வு, தலைவலி, கை, கால்களில் வலி, எரிச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
மன அழுத்தம் – Periods Symptoms in Tamil:

- Mathavidai Arikurigal: இந்த நேரத்தில் பெண்களுக்கு யாரை பார்த்தாலும் எரிந்து விழுவது, தேவையில்லாமல் கோபப்படுவது, பதட்டம், மன அழுத்தம் போன்றவை மாதவிடாய் வருவதற்கான முன் அறிகுறிகளே ஆகும்.
உற்சாகம் குறைந்து காணப்படுவது – மாதவிடாய் அறிகுறிகள்:

- பசியின்மை, தூக்கமின்மை, பிடித்தவற்றை செய்வதற்கு கூட ஆர்வமில்லாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் உடலில் ஏற்படும். இரத்தப்போக்கு தொடங்கிய பின் இந்த அறிகுறிகள் படிப்படியாக குறைய ஆரம்பித்து விடும்.
- இந்த அறிகுறிகள் ஒரு சிலருக்கு குறைவாக இருக்கும், ஒரு சிலருக்கு அதிகமாக இருக்கும். மாதவிடாய் சுழற்சி 25 முதல் 35 நாட்களுக்குள் வர வேண்டும்.
மாதவிடாய் பிரச்சனைளை சரி செய்ய சில டிப்ஸ்கள்:

- இந்த நாட்களில் அதிகமாக சாப்பிடாமல் குறைவாக சாப்பிடுவது நல்லது. எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவு, உப்பு அதிகம் சேர்த்த உணவு போன்றவற்றை குறைவாக சாப்பிடுவதன் மூலம் மார்பகத்தில் ஏற்படும் வீக்கங்களை சரி செய்யலாம்.
- காய்கறிகள், பழங்கள், தானிய உணவுகள் போன்றவற்றை சாப்பிடலாம். காபி, தேநீர், குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.
- மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்ய உடற்பயிற்சி மேற்கொள்வது, வெந்தயம் சாப்பிடுவது நல்லது. மேலும் நல்ல தூக்கம் மிகவும் முக்கியம்.
- மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள். மேற்கூறப்பட்ட சில குறிப்புகளை மாதவிடாய் நேரத்தில் பின்பற்றினால் மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
Tamil maruthuvam tips |