மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து | Piles Treatment in Tamil

Piles Treatment in Tamil

மூலம் நோய் குணமாக பாட்டி வைத்தியம்

Piles Treatment in Tamil:- இப்பொழுது பலரும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றன. இதற்கு என்ன காரணம் என்றால்?  முறையற்ற உணவு முறை மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது கோடைகாலம் வேற வந்து விட்டது இந்த சமயத்தில் உடல் அதிகம் உஷ்ணமாகும் இதன் காரணமாக உடல் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இந்த நேரத்தில் உடலுக்கு அதிகம் உஷ்ணத்தை தரக்கூடிய உணவுகளை நாம் சாப்பிடும் போது மேலும் பல ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

அந்த வகையில் உடல் உஷ்ணத்தினால் ஏற்படக்கூடிய நோய் தான் மூலம். இதன் காரணமாக கோடை காலத்தில் பலரும் மூலம் நோயால் பாதிக்கப்படுகின்றன. இந்த பிரச்சனையை வெளியே சொல்வதற்குக்கூட பலர் தயங்குவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இந்த பதிவில் மூலம் நோய் எதனால் வருகிறது, மூலம் நோய் குணமாக (moolam kunamaga) நாட்டு மருத்துவம், சித்த வைத்தியம், பாட்டி வைத்தியம் என்னென்ன உள்ளது? மூலம் நோய் உள்ளவர்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்? என்னென்ன உணவுகளை சாப்பிடக்கூடாது போன்ற விவரங்களை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

மூலம் எதனால் வருகிறது?

முதலில் இந்த மூலம் நோய் எதனால் வருகின்றது என்று தெரிந்து கொள்வோம். நமது முறையற்ற உணவு முறை காரணமாகவே இந்த மூல நோய் நமக்கு வருகிறது. அதாவது சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் வயிற்றை காலியாக வைத்துக்கொள்வது, உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளாமல் இருப்பது, உடல் உஷ்ணமாக இருக்கும் போது மேலும் உடலுக்கு அதிகம் உஷ்ணத்தை தரக்கூடிய உணவுகளை சாப்பிடுவது, ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பது இது போன்ற காரணங்களால் இந்த மூலம் நோய் வருகிறது.

மூலம் என்றால் என்ன?

நம் உடலில் ஆசனவாயில் உள்ள இரத்தக்குழாய்களில் வீக்கம் ஏற்பட்டு, அதன் உள்ளிருக்கும் இரத்த நாளத்தின் சுவர் மெல்லியதாகி, மலம் கழிக்கும்போது இரத்த நாளங்கள் கிழிந்து ரத்தம் வெளியேறுவதை ‘மூலம் அல்லது பைல்ஸ்’ (Piles) என்று சொல்கிறோம். இவற்றில் நான்கு நிலைகள் இருக்கின்றன அதனை பற்றி இப்பொழுது நாம் தெரிந்துகொள்வோம்.

மூலம் அறிகுறிகள்

மூலம் நோய் அறிகுறிகள் நிலை: 1

எந்த ஒரு வலிகளும் இல்லாமல் இரத்தம் மட்டும் வெளியேறுவது மூலம் நோயின் முதல் நிலையாகும்.

மூலம் நோய் அறிகுறிகள் நிலை: 2

மலம் கழியும்போது இரத்தத்தோடு சதையும் வெளியே வந்து, மலம் கழித்து முடித்தவுடன் சதை தானாகவே உள்ளே செல்வது மூல நோயின் இரண்டாம் நிலையாகும்.

மூலம் நோய் அறிகுறிகள் நிலை: 3

இரத்தத்தோடு சதை வந்து, மலம் கழித்து முடித்த பின்னர் சதை தானாக உள்ளே செல்லாமல் அழுத்தம் கொடுத்து, உள்ளே சென்றால் அதனை மூலம் நோயின் மூன்றாம் நிலை என்று சொல்கின்றனர்.

மூலம் நோய் அறிகுறிகள் நிலை: 4

எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் சதை உள்ளே செல்லாமல், இரத்தத்தோடு வெளியே வந்து நிற்பதை மூலம் நோயின் கடைசி கட்டம் என்று சொல்கின்றனர். இந்த கடைசி கட்டம் வந்து விட்டால் அதன் பிறகு கட்டாயமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே மூல நோயின் ஆரம்ப கட்டத்திலேயே அதற்கான சிகிச்சை முறையை மேற்கொண்டால் இந்த பிரச்சனையை எளிதாக சரி செய்துவிடலாம்.

மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து – Piles Treatment in Tamil

Moolam Gunamaga Tips:- மூலம் நோய் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் 100 கிராம் வேகவைத்த கருணைக்கிழங்கு, ஒரு ஸ்பூன் வேகவைத்த வெந்தயம் மற்றும் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை ஒரு சுத்தமான பவுலில் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள். இந்த கலவையை இரவு உறங்குவதற்கு முன் தயார் செய்து சாப்பிட்டு வர வெகு சீக்கிரம் இந்த மூல நோய் குணமாகும்.

மூலம் நோய் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்:

கீரை:

மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்று பார்த்தால் தங்களின் அன்றாட உணவுகளில் வெந்தயக்கீரை, பசலைக்கீரை, சுக்காங்கீரை ஆகிய கீரை வகைகளை சேர்த்து கொள்வதினால் இந்த பிரச்சனை குணமாகும்.

மீன்: 

மூலம் குணமாக மீன் சாப்பிடலாம். மீன் சாப்பிடுவதன் மூலம் இந்த மூல நோய் குணமாகும். குறிப்பாக மீன்களில் விலாங்கு மீன் சாப்பிட்டு வர வெகு சீக்கிரம் இந்த மூல நோய் சரியாகும்.

பழங்கள்:

மூல நோயால் அவஸ்த்தைப்படுபவர்கள் தினமும் நீர்சத்து அதிகமுள்ள பழங்களை சாப்பிடலாம் இதனால் உடல் சூடு தணியும். அதிலும் மாதுளை, அத்திப்பழம், கற்றாழை போன்றவற்றின் பழச்சாறுகளை ஐஸ் சேர்க்காமல் சாதாரணமாக சாப்பிடலாம். அதேபோல் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய மோர், பதநீர், இளநீர் போன்றவற்றை தினமும் அருந்தலாம் இதன் மூலம் உடல் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

காய்கறிகள்:

மூல நோய் உள்ளவர்கள் நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். அதாவது பீன்ஸ், வெண்டைக்காய், அவரைக்காய் போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்.

கிழங்கு:

மூல நோய் சரியாக தங்களது அன்றாட உணவுகளில் கருணைக்கிழகை தவிர்த்து மற்ற அனைத்து கிழங்குகளையும் சாப்பிடலாம். கிழங்கு வகைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

இரத்த மூலம் நோய் குணமாக மருந்து:

மூலம் நோய் குணமாக நாட்டு மருந்து:- மலம் கழிக்கும் போது இரத்தம் வருவதை இரத்த மூலம் என்று சொல்வார்கள். இந்த பிரச்சனை குணமாக வாழைப்பூவை இடித்து கொள்ளுங்கள். பின் அவற்றில் சாறை வடிகட்டி குடித்து வர இந்த இரத்த மூலம் குணமாகும். அதேபோல் மாங்கொட்டையிலுள்ள பருப்பைத் தூளாக்கி, மோரில் கலந்து குடித்து வர இந்த இரத்த மூலம் நோய் குணமாகும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியம்