புடலங்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இது தெரியாம போச்சே..!

Pudalangai Benefits in Tamil

Pudalangai Benefits in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் புடலங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நாம் அன்றாடம் சாப்பிடும் அனைத்து காய்கறிகளும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.

அதுபோல புடலங்காயில் பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. நாம் வாரம் ஒரு முறையாவது புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். அந்த வகையில் புடலங்காய் எந்தெந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என்று பார்க்கலாம் வாங்க..!

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் | Water Rich Vegetables in Tamil

புடலங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: 

புடலங்காயில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், இதில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, அயோடின், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

மூலநோய் குணமாக: 

மூலநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு புடலங்காய் ஒரு மருந்தாக இருக்கிறது. மூலநோய் உள்ளவர்கள் புடலங்காயை வாரம் 1 முறையாவது உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் மூல நோயின் தாக்கத்தை குறைக்கிறது.

வயிற்று கோளாறு நீங்க:

வயிற்று கோளாறுகளை தடுக்க

புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் வயிறு சம்மந்தப்பட்ட கோளாறுகளான வயிற்றுப்போக்கு, அஜீரண கோளாறுகள் மற்றும் மலசிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.

மேலும் இது பசி உணர்வை தூண்டுகிறது. அதுபோல இது குடல் புண், வயிற்றுப்புண் மற்றும் தொண்டைப் புண் போன்ற பாதிப்புகளை குணப்படுத்துகிறது.

புடலங்காய் புட்டு இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்…!

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த: 

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த

புடலங்காய் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படுகிறது. இதில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் இது எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கிறது. அதுபோல மூட்டுவலி, எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

உடல் எடை குறைய:

உடல் எடை குறைய

புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால், உடலில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. மேலும் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கிறது. அதனால் உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

சிறுநீரக கற்கள் கரைய:

சிறுநீரக கற்கள் கரைய

புடலங்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் இது உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை மூலம் வெளியேற்ற உதவுகிறது. அதுபோல புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சிறுநீரக கற்கள் கரைக்க உதவுகிறது.

புடலங்காய் கூட்டு செய்வது எப்படி?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil