தினமும் புதினா டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள்..!

Advertisement

Pudina Tea Benefits in Tamil

புதினா ஒரு வாசனை நிறைந்த மருத்துவ மூலிகை செடியாகும். உணவின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்க புதினாவை பல்வேறு உணவுகளில் சேர்ப்பார்கள். அதுமட்டுமில்லாமல் இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. எனவே இதனை பயன்படுத்தி டீயும் போடுவார்கள். புதினாவின் சுவை மற்றும் நறுமணத்தால் இது பெரும்பாலான உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே புதினாவில் தினமும் டீ போட்டு குடித்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

லெமன் டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

தினமும் புதினா டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

மன அழுத்தம் குறையும்:

 புதினா டீ பயன்கள்

நாம் அனைவருமே தினமும் பல வேலைகளை செய்து வருகிறோம். இதனால் நம் உடல் அதிக ஆற்றலை இழப்பதோடு, அதிகமான வேலை சுமை காரணமாக மன அழுத்தமும் ஏற்படுகிறது. எனவே புதினா டீயை தினமும் காலையில் அருந்தி வருவதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது.

செரிமான பிரச்சனை நீங்கும்:

செரிமான பிரச்சனை நீங்கும்

தினமும் புதினா டீ குடித்து வருவதன் மூலம் வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை நீங்கி உடல் புத்துணர்ச்சி பெரும். அதுமட்டுமில்லாமல் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களும் அழிந்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உடல் எடையை குறைக்கிறது:

 புதினா டீ நன்மைகள்

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் தினமும் 1 கப் புதினா டீ குடித்து வருவதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் காலையில் 1 கப் புதினா டீ குடித்து வரலாம். புதினா டீயில் வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் பலவிதமான தாதுக்கள் நிறைந்துள்ளது. இது நம் உடலை எப்போதும் ஆற்றலுடன் வைத்து கொள்கிறது.

வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது:

வாய் துர்நாற்றம் நீங்க

பொதுவாக அசைவ உணவுகள் சாப்பிட பிறகு வாயில் துர்நாற்றம் ஏற்படும். எனவே இதுபோன்ற துர்நாற்ற பிரச்சனைகளுக்கு புதினா டீ ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

தினமும் இலவங்கப்பட்டை டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

காயங்களை குணப்படுத்துகிறது:

 pudina tea benefits in tamil

புதினா இலையில் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. எனவே புதினா இலைகளை அரைத்து அதிலுள்ள சாற்றினை காயங்கள், வெட்டுக்கள் மற்றும் தோல் அரிப்பு போன்றவை உள்ள இடத்தில் தடவினால் காயங்கள் விரைவில் குணமாகும். 

முக அழகை மேம்படுத்துகிறது:

 mint tea benefits in tamil

புதினா இலைகளில் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சிறந்த கிளென்சர், டோனர் மற்றும் மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. எனவே  தினமும் புதினா டீ குடித்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் மற்றும் பருக்கள் போன்றவை நீங்கி முகம் அழகுபெறும்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil 
Advertisement