ரோஸ்மேரி எண்ணெய் மருத்துவ பயன்கள் | Rosemary Oil Benefits in Tamil
நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய ஆரோக்கியம் பகுதியில் ரோஸ்மேரி எண்ணெயின் பயன்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். இதனுடைய மலர்கள் இளஞ்சிவப்பு, ஊதா, வெள்ளை அல்லது நீல நிறத்தில் அமைந்திருக்கும். ரோஸ்மேரி எண்ணெய் அழகு சாதன பொருளாகவும், பல சிகிச்சைக்கும் பயன்படுகிறது. இவை புதினா குடும்பத்தை சேர்ந்தது. வாங்க ரோஸ்மேரி எண்ணெயின் பயன்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்..
தேங்காய் எண்ணெய் நன்மைகள் |
நுரையீரல் பிரச்சனைக்கு:
இந்த எண்ணெயில் இருக்கக்கூடிய சினியோலி வேதிப்பொருளானது நுரையீரலில் இருக்கக்கூடிய சளிகளை நீக்கி இருமலை குறைக்கிறது. அதிகளவு ஆன்டிமைக்ரோபியல் இருப்பதால் நுரையீரல் பகுதியில் ஏற்படும் தொற்றினை குறைக்கிறது.
சரும ஆரோக்கியத்திற்கு:
சருமம் பளபளப்பாக இருப்பதற்கு நாம் கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்துவோம். இந்த ரோஸ்மேரி எண்ணெய் அழகு சாதன பொருள்களில் முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த எண்ணெயை வறண்ட சருமம் கொண்டவர்கள் பயன்படுத்தி வந்தால் முகம் வறட்சி இல்லாமல் காட்சியளிக்கும். இதில் இருக்கக்கூடிய ஆன்டி பாக்டீரியல் சருமத்தில் பருக்கள் வராமல், கரும்புள்ளிகளையும் நீக்க உதவியாக இருக்கிறது.
கூந்தல் வளர்ச்சிக்கு:
இன்றைய சூழ்நிலையில் ஆண்களும் பெண்களும் சரிநிலையில் அவதிப்படுவது முடி கொட்டும் பிரச்சனை. இதற்கு பல விளம்பரங்களில் விளம்பரப்படுத்தும் எண்ணெயினை வாங்கி உபயோகப்படுத்தி இருக்கின்ற கூந்தலும் இல்லாமல் போய்விடுகிறது. முடி நன்றாக வளர்ச்சி அடைவதற்கு தேங்காய் எண்ணெயுடனோ அல்லது ஆலிவ் எண்ணெயுடன் இந்த ரோஸ்மேரி எண்ணெயை கலந்து தடவிவர கூந்தல் வளர்ச்சி மேம்படும். மேலும் வழுக்கை உள்ளவர்களுக்கும், பொடுகு தொல்லைக்கும் நல்ல நிவாரணத்தை கொடுக்கிறது.
நல்லெண்ணெய் பயன்கள் |
நினைவு திறன் அதிகரிக்க:
ரோஸ்மேரி எண்ணெயினை நினைவு மூலிகை என்று கூறுகிறார்கள். மூளை பலவீனமாக உள்ளவர்கள் சுவாசிக்கும் போது அவர்களுடைய நினைவுத்திறனை அதிகரிக்கிறது. இந்த எண்ணெயில் அதிகமாக நியூரோபுரடக்டிவ் தன்மை இருப்பதால் வயது முதிர்ச்சி அடைந்தவுடன் ஞாபக திறன் குறைவதை முற்றிலும் தடுத்து நிறுத்துகிறது.
வலி நிவாரணத்திற்கு:
இப்போது உள்ள இளஞ்சிறுசுங்களுக்கு கூட மூட்டு, கை கால் வலி ஏற்படுகிறது. இதற்கு காரணம் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளாததால் தான். இந்த ரோஸ்மேரி எண்ணெயில் கேம்பர் மற்றும் ரோஸ்மேரினிக் அமிலம் அதிகமாக இருப்பதால் மூட்டுகளில் ஏற்படும் வலி, தசை வலி, தலை வலி போன்றவைகளை குறைக்கிறது.
குறிப்பு: இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டபிறகு பயன்படுத்த வேண்டும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |