அழிஞ்சில் இலையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Sage Leaves Benefits in Tamil

Sage Leaves Benefits in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய ஆரோக்கியம் பதிவில் அழிஞ்சில் இலையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த அழிஞ்சில் இலைகள் நம் நாட்டின் வனப்பகுதிகளில் காணப்படகூடிய ஒரு மூலிகை மரமாகும். அனஞ்சி என்று அழைக்கப்படும் அழிஞ்சில் மரம் தென்னிந்தியா மற்றும் மியான்மர் போன்ற வெப்பம் அதிகமாக உள்ள காட்டு பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இந்த அழிஞ்சில் மரத்தில் வேர், இல்லை, பட்டை என அனைத்தும் ஆரோக்கிய பயன்களை கொண்டுள்ளது. இந்த அழிஞ்சில் இலையின் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் வாங்க..!

ஆடாதோடை இலையின் மருத்துவ குணம்

அழிஞ்சில் இலையின் நன்மைகள்:

இந்த அழிஞ்சில் இலைகள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் அல்கலாய்டுகள் மற்றும் ஐசோலேட்டுகள் அதிகளவில் காணப்படுகின்றன. மேலும், இதில் வெனோட்டர்பைன், அன்கோரின், செபேலின், மற்றும் சைகோட்ரின் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இந்த இலைகளின் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

புற்றுநோய் வராமல் தடுக்க: 

புற்றுநோய் வராமல் தடுக்க

இந்த அழிஞ்சில் இலைகள் தோல் புற்றுநோய் வராமல் தடுக்க பயன்படுகிறது. இந்த அழிஞ்சில் இலைகளை வாரம் 1 முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்க உதவுகிறது. மேலும் இந்த இலைகள் புற்றுநோய் செல்களை அளிக்கும் பண்புகளை கொண்டுள்ளன.

குடல் புண் குணமாக: 

குடல் புண் குணமாக

இந்த அழிஞ்சில் இலைகளை உணவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க முடியும். மேலும் இது அல்சர் என்று சொல்ல கூடிய குடல் புண், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

முகச் சுருக்கம் நீங்க

முகச் சுருக்கம் நீங்க

இந்த அழிஞ்சில் மரத்தின் இலை, வேர் மற்றும் பட்டை போன்றவை சரும பிரச்சனைகளுக்கு நல்ல பலன் அளிக்கிறது. இந்த அழிஞ்சில் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி வந்தால் முக சுருக்கம் மற்றும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அதேபோல  முகப்பருக்கள் போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்க முடியும்.

விஷத்தை முறிக்க:

இந்த அழிஞ்சில் இலைகள் நாய், பாம்பு, தேள் மற்றும் பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்தல் அதற்கு மருந்தாக பயன்படுகிறது. இதுபோன்ற விஷங்களை முறிக்க இந்த அழிஞ்சில் இலைகள் பயன்படுகின்றன.

நொச்சி இலை மருத்துவம்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil