சாப்பிட்ட உடன் மலம் கழிப்பவர்களுக்கு தீர்வு

why do i poop immediately after eating in tamil

சாப்பிட்டவுடன் மலம் கழிப்பது ஏன்.?

வணக்கம் நண்பர்களே..! பலருக்கும் உணவு சாப்பிட்ட பிறகு மலம் கழிப்பார்கள். சாப்பிட்ட உடன் மலம் கழிப்பவர்கள் வெளியில் சென்றால் சாப்பிடுவதற்கு ரொம்ப கஷ்டப்படுவார்கள். விருப்பப்படி சாப்பிட மாட்டார்கள். ஏன் சாப்பிட்ட உடன் மலம் கழிக்கிறோம் என்று யோசித்தீர்களா.? அப்படி நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க சாப்பிட்ட உடன் ஏன் மலம் கழிக்கிறோம். அதற்கான தீர்வை பற்றி காண்போம்.

இதையும் படியுங்கள் ⇒ சாப்பிட்டவுடன் செய்யவே கூடாத 7 விஷயங்கள்..!

சாப்பிட்டவுடன் மலம் வர காரணம்:

சாப்பிட்ட உடன் மலம் கழிப்பதை கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ் என்று அழைக்கிறோம். சாப்பிட்ட உணவு வயிற்றுக்குள் சென்றதும் ஹார்மோன்கள் சுரக்கும். உணவு செரிமானம் ஆனதும் மலக்குடலுக்கு சென்று மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். உணவு ஒவ்வாமை, சிலருக்கு கணையம் சரியாக வேலை செய்யாது அதனால் கொழுப்பு செரிக்கமுடியாத நிலையில் உடனடியாக மலம் கழிக்க தோன்றும்.

சாப்பிட்ட உடன் மலம் கழிப்பதற்கு தீர்வு:

சாப்பிட்ட உடன் மலம் கழிப்பவர்கள் முதலில் உணவு முறையை சரியாக எடுத்து கொள்ளவும்.

எண்ணெய் அதிகமாக சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளையும் சாப்பிட கூடாது.

வெண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ள உணவை சாப்பிட கூடாது. பால் மற்றும் பால் சேர்த்த உணவுகளை அதிகம் சேர்க்க கூடாது.

புதிதாக சமைத்த உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் சமைத்ததை மதியம் அல்லது நேரம் சென்று சாப்பிட கூடாது.

காய்கறிகள், பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும்.

உணவை மூன்று வேலையும் சரியாக சாப்பிட வேண்டும்.

மனிதர்களுக்கு இரவு உறக்கம் ரொம்ப முக்கியமானது. அதிலும் சாப்பிட்ட உடன் மலம் கழிப்பவர்கள் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.

மன பதற்றத்தை தவிர்க்க வேண்டும். மன உளைச்சல் உள்ளவர்களுக்கு இரைப்பையில் அமிலம் அதிகமாக சுரக்கும். இதன் காரணமாக கேஸ்ட்ரோகோலிக் ரெஃப்ளெக்ஸ் பிரச்சனை ஏற்படும்.

புகை பிடித்தல் மற்றும் மது குடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ளதை பின்பற்றினாலே சாப்பிட்ட உடன் மலம் கழிப்பதை தவிர்க்கலாம்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்