கை கால் நடுக்கம் சரியாக சித்த மருத்துவம்..!

கை கால் நடுக்கம் சரியாக

Shivering Treatment in Tamil..!

கை கால் நடுக்கம் சரியாக – shivering treatment in tamil:- நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய நடுக்கத்தைத்தான் உடல் நடுக்கம் என்று சொல்வார்கள். ஆனால் இதற்கு முக்கிய காரணம் மூளை தான். அதாவது எப்போது எல்லாம் மூளையின் கட்டளைகள் நரம்புகளுக்கு போய் சேர்வதில் தடை ஏற்படுகின்றதோ அவற்றை தான் நரம்பு தளர்ச்சி என்று சொல்வோம். இதனால் அதிகபட்ச தாக்கம் உடலுறவில் நாட்டம் குறைவது, நாள்பட்ட சோர்வு, மனநிலை பாதிப்பு, பதட்டம், பயம், அதிகபட்ச சிந்தனைகள் போன்றவைகள் எல்லாம் நரம்பு பலவீனமானதற்கு அறிகுறிகளாக இருக்கிறது.

அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?

எனவே இந்த கை கால் நடுக்கம் சரியாக சித்த மருத்துவம் (shivering treatment in tamil) என்ன உள்ளது மற்றும் இதற்கான உணவு முறைகள் என்னென்ன என்பதையெல்லாம் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

நரம்பு தளர்ச்சி குணமாக சித்த மருத்துவம்..!

கை கால் நடுக்கம் வர காரணம் (Shivering Reasons):-

Shivering Reasons / udal nadukkam nirka arokiyam pera tips:- இந்த கை கால் நடுக்கம் வர காரணம் என்ன என்று பார்த்தல் பொதுவாக அதிக குளிர் மற்றும் மழை காலங்களில்தான் அதிகமாக இந்த கை கால் நடுக்கம் பிரச்சனை ஏற்படுகின்றது.

அதாவது அதிக குளிரை உடல் தாங்கி கொள்ள முடியாமல் கை கால்களில் நடுக்கம் ஏற்படும்.

மேலும் இப்போதுள்ள பெரும்பாலான இளைஞர்கள் புகைப்பழக்கம், புகையிலை, போதை பழக்கம், தவறான உணவு முறையால் மன அழுத்தம், உடல் உஷ்ணம், வாயுத்தொல்லை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நரம்புத்தளர்ச்சி பாலியல் குறைபாடுகளுக்கு ஆளாகிறார்கள்.

மேலும் சர்க்கரை நோய், இதயநோய் உள்ளவர்களுக்கும் இந்த கை கால் நடுக்கம் ஏற்படும்.

சரி இந்த கை கால் நடுக்கம் சரியாக வீட்டு வைத்தியம் என்ன உள்ளது மற்றும் இதற்கான உணவு முறைகள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம் வாங்க.

கை கால் மரத்துப்போதல் சரியாக பாட்டி வைத்தியம்..! Numbness Treatment in…

கை கால் நடுக்கம் சரியாக சித்த மருத்துவம் (Shivering treatment at home) – கஜூர் காய் பால்:-

கஜூர் காய் பால் செய்ய தேவையான பொருட்கள்:

  1. பால் – 200 மில்லி
  2. கஜூர் காய் – 2
  3. கிராம்பு – 2
  4. ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
  5. சுக்கு பொடி – 1/2 ஸ்பூன்
  6. பனை வெல்லம் – தேவையான அளவு

கஜூர் காய் பால் செய்முறை (shivering of hands):-

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் 200 மில்லி பாலினை சேர்த்து, மிதமான சூட்டில் நன்றாக காய்ச்சவும்.

பின் அவற்றில் இரண்டு கிராம்பு, விதை நீக்கிய 2 கஜூர் காய் பொடிதாக நறுக்கியது, ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் நன்றாக காய்ச்சவும்.

பின் அடுப்பில் இருந்து இறக்கி அதனுடன் 1/2 ஸ்பூன் சுக்கு பொடி மற்றும் பனை வெல்லம் தேவையான அளவு கலந்து கொள்ளுங்கள். இந்த பாலில் சேர்க்கப்பட்டுள்ள கிராம்பு மற்றும் கஜூர் காயினை வடிகட்டி விடாமல் அப்படியே மென்று சாப்பிட வேண்டும்.

இந்த கை கால் நடுக்கம் சரியாக இந்த பாலினை தினமும் செய்து காலை, மாலை என்று இரண்டு வேளைகளும் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வருவதினால் இந்த கை கால் நடுக்கம் சரியாகிவிடும்.

கை கால் நடுக்கம் சரியாக சித்த மருத்துவம் (shivering treatment at home):

கை கால் உடல் நடுக்கத்தின் காரணங்கள்: இந்த கை கால் நடுக்கம் குணமாக வெண்தாமரை இதழினை தண்ணீரில் சேர்த்து கஷாயம் வைத்து வடிகட்டி பாலுடன் கலந்து தினமும் காலை மாலை இரு வேளைகளும் அருந்தி வர கை நடுக்கம் குணமாகும்.

கை கால் நடுக்கம் குணமாக (hand Shivering problems solution in Tamil):-

உடலில் ஏற்படும் கை கால் நடுக்கம் குணமாக இஞ்சியை தட்டி அதன் சாறினை எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர கை கால் நடுக்கம் குணமாகிவிடும்.

மேலும் அதிகளவு உணவில் சுண்டைக்காய் சேர்த்து கொள்ள கை கால் நடுக்கம் சரியாகும்.

தூங்கும் போது கை கால் மரத்துப்போதல் சரியாக..!

கை நடுக்கம் சரியாக (hand Shivering problems solution  in Tamil):

கை கால் உடல் நடுக்கத்தின் காரணங்கள்: மிளகினை பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வர இந்த கை கால் நடுக்கம் குணமாகும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்