சர்க்கரை நோய் அறிகுறிகள் | Sugar Symptoms in Tamil

Sugar Symptoms in Tamil

சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்

பொதுவாக இப்போதெல்லாம் மனிதர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சர்க்கரை நோய். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதை தான் சர்க்கரை நோய் என்று அழைக்கிறோம். இந்த சர்க்கரை நோயை டைப் 1 டயபிடிஸ் & டைப் 2 டயபிடிஸ் என இரண்டு வகைகளாக பிரிக்கலாம். டைப் 1 டயபிடிஸ் என்பது நம் உடலில் இருக்கும் பேன்கிரியாஸ் (Pancreas) என்னும் உறுப்பில் இருந்து இன்சுலின் என்னும் ஹார்மோன் சுரக்கும். இந்த இன்சுலின் ஹார்மோன் நம் உடலில் சுத்தமாக சுரக்காத நிலையை தான் டைப் 1 டயபிடிஸ் என்று அழைக்கிறோம். இந்த டைப் 1 டயபிடிஸ் பொதுவாக சிறிய குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறதாம். டைப் 2 டயபிடிஸ் என்பது பெருபாலான மக்களுக்கு ஏற்படக்கூடிய சர்க்கரை நோய் என்று சொல்லலாம். குறிப்பாக 40 வயது கடந்தவர்களுக்கு இந்த டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

சர்க்கரை நோய் குணமாக இது ஒன்று குடித்தால் போதும்..!

 

இந்த டைப் 2 டயபிடிஸ் எப்படி வருகிறது என்றால்.. முறையற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக கணையத்தில் இருந்து சுரக்கும் இன்சுலின் உடலில் வேலை செய்யாத நிலை உருவாகிவிடுகிறது. இதன் காரணமாகவே உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்படுகிறது இவற்றை தான் டைப் 2 டயபிடிஸ் என்று சொல்கிறோம். இந்த சர்க்கரை நோய் என்பது சாதாரண நோய் என்று சொல்லவே முடியாது.. ஏனென்றால் நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் மெல்ல மெல்ல பாதித்து, இறுதியில் நம்மை மரண வாசலுக்கு அழைத்து செல்லக்கூடிய கொடிய நோய் என்றே சொல்லலாம். இருப்பினும் இந்த சர்க்கரை நோயை நாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்ளும் போது நமது உடல் நலத்தை நன்றாக பேணிக்காக்க முடியும். சரி இந்த பதிவில் சர்க்கரை நோய் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகளை பற்றி படித்தறியலாம் வாங்க.

சர்க்கரை நோய் அறிகுறிகள்:

Sugar Symptoms in Tamil: 1

இரத்தத்தில் அதிகம் சர்க்கரை இருப்பதினால் நம் உடலானது அந்த சர்க்கரையை வெளியேற்றுவதற்காக நீரை வெளியேற்றும். இதன் காரணமாக சிறுநீரகத்திற்கு அதிகம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது இதனால் அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பார்கள்.

Sugar Symptoms in Tamil: 2

அதிக தாகம் மற்றும் நாவில் அதிக வறட்சி ஏற்படும். இதற்கு என்ன காரணம் என்றால் அடிக்கடி சிறுநீர் கழித்துக் கொண்டே இருப்பதினால் உடலில் உள்ள நீர் சத்து குறைகிறது. இதனால் அதிக தாகம் மற்றும் நாவில் வறட்சி உணர்வு ஏற்படும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட மற்றும் சாப்பிடகூடாத உணவு!!!

சர்க்கரை நோய் அறிகுறிகள்: 3

கண் பார்வை மங்கலாக இருக்கும்.. இதுவும் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

Sugar Symptoms in Tamil: 4

உடல் எடை அதிகரிப்பு அல்லது குறைவது.. சர்க்கரை நோயை பொறுத்தவரை உடலில் இன்சுலின் வேலை செய்யாத போது உடல் எடையானது அதிகரிக்கும். அதேபோல் ஒருவருக்கு உடலில் இன்சுலின் அளவு மிகவும் குறைவாக இருக்கும் போது உடல் எடையானது குறைய ஆரம்பிக்கும்.

சர்க்கரை நோய் விரட்டும் மருந்து !!! பயிரிடும் முறை மற்றும் பயன்கள்…

Sugar Symptoms in Tamil: 5

உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் உடல் மிகவும் சோர்வாக இருக்கும். தங்களது அன்றாட பணிகளை செய்வதில் கூட அதிக உடன்பாடுகள் இருக்காது. உடல் அந்த அளவிற்கு மிகவும் சோர்வாக இருக்கும்.

அறிகுறிகள்: 6

உடலில் ஏதாவது சிறிய காயங்கள் ஏற்பட்டால் கூட அந்த காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலங்கள் ஆகும். இந்த அறிகுறி சர்க்கரை நோய் இருப்பதற்கான முக்கியமான அறிகுறி என்று சொல்லலாம்.

சர்க்கரை நோயை விரட்டும் அற்புத திருத்தலம்!

Sugar Symptoms in Tamil: 7

கால் பாதங்களில் எரிச்சல், வலி, உணர்வில்லாமல் இருப்பது இது போன்ற அறிகுறிகளும் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறி என்று சொல்லலாம்.

சர்க்கரை நோய் அறிகுறிகள்: 8

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக பசி எடுத்து கொண்டே இருக்கும். நன்றாக சாப்பிட்டால் கூட சாப்பிட்ட திருப்தி இன்மை. எப்பொழுதும் சாப்பிட்டுக்கொண்டே  இருக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

கர்ப்பகால சர்க்கரை நோய் வர காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிகள்..!

Sugar Symptoms in Tamil: 9

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பல் ஈறுகள் மிகவும் பலவீனமாக இருக்கும். இதனால் சொத்தை பல், பல் கூச்சம்,  பற்கள் ஆடுவது, ஈறுகளில் தேய்மானம் போன்ற பற்கள் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் ஏற்படும்.

சர்க்கரை நோய் அறிகுறிகள்: 10

பிறப்புறுப்பில் புண் ஏற்படுவதும் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறி என்று சொல்லலாம்.. குறிப்பாக ஆண்களுக்கு பிறப்புறுப்பில் புண், எரிச்சல், தோல் உரிதல், விறைப்பு தன்மை குறைவு இது போன்ற அறிகுறிகள் ஆண்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

காச நோய் அறிகுறிகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆரோக்கியமும் நல்வாழ்வும்